இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நேற்று இரவு நண்பர்கள் நான்கு பேர் சந்திப்பு.திடீரன ஒரு மின் வெட்டம்.
எங்கும் ஒலி மயம்.
டமார், டுமீல் என மின்னல் வெட்டு.
மேகங்கள் களைந்து பேயாட்டம்
பதறி விட்டோம்.
பார்த்தால் கடவுள். அட உண்மைதாங்க.
தூ வெள்ளை நிறத்தில்.....
புளங்காகிதம் அடைந்தோம்.
'மகனே, உலகில் நல்லவர்கள் முன் மட்டுமே தோன்றுவது என என் கொள்கை மாற்றப்பட்டு விட்டது.
'தேடி பிடித்து கடைந்தெடுத்து கண்டு பிடித்தேன் உன்னை. மனம் மகிழ்ந்தேன்.
'என்ன வரம் வேண்டும். கேள் மகனே. கேள்.
ஆனால் ஒன்று மட்டும் நினைவில் கொள். நிலவை கேள். சூரியனை கேள்.
பெட்டி நிறைய அமெரிக்கன் டாலர் கேள்.
ஆனால் என்னால் முடியாததை மட்டும் கேட்காதே. நான் மறைந்து விடுவேன்.'
நன்றாக யோசித்து ஒரு வரம் கேட்டேன்.
அட கடவுளே.... மீண்டும்......
மின் வெட்டம்....
ஒலி மயம்....
டமார், டுமீல் என மின்னல் வெட்டு....
மேகங்கள் களைந்து பேயாட்டம்....
மயான அமைதி. நிசப்தம். கும்மிருட்டு....
**** கடவுளை காணவில்லை *****
நண்பர்கள் ஓடி வந்து, என்னிடம் பதட்டத்துடன் கேட்டார்கள்.
'அடப்பாவி அப்படி என்னடா கேட்ட.........'
**** டேய் ஒன்னுமில்லடா.......
நம்ம தமிழ் வலைப்பதிவாளர்கள் எல்லாம் சண்ட போடாம ஒண்ணா, ஒற்றுமையா இருக்கணும்னு கேட்டேன். அவ்வளவுதான்டா....
*****************************
சாரம்:
"வானும், நீரும், காற்றும், நெருப்பும்
பொதுவில் இருக்குது.
மனுஷன் காலு பட்ட பூமி மட்டும்
பிரிஞ்சு கிடக்குது.
பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம்
மனிதன் இதயமே
உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே. அமைதி நிலவுமே......"
8 அன்பு உள்ளங்கள்....:
கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா?????? :)))
//தேடி பிடித்து கடைந்தெடுத்து கண்டு பிடித்தேன் உன்னை. மனம் மகிழ்ந்தேன்.//
அங்கே ஒரு koduma kooththaduchchaam...!!!!! :-)
நம்ம தமிழ் வலைப்பதிவாளர்கள் எல்லாம் சண்ட போடாம ஒண்ணா, ஒற்றுமையா இருக்கணும்னு கேட்டேன். அவ்வளவுதான்டா....\\
நாமெல்லாம் பாவம் தான் ...
:)))))))))))
Blogger செந்தழல் ரவி said...
:)))))))))))//
என்னங்க, முதன் முறையாக வந்துட்டு ஒண்ணுமே சொல்லாம போய்ட்டீங்களே தலைவா :-)
கடவுளே கான்டாயிடாரா, மாதவ்?
அப்புறம் துபாய் சந்திப்பு பத்தி யாரும் இன்னமும் பதிவு ஒன்றும் போடவில்லையா? :-)
Post a Comment