Showing posts with label ஆன்மிகம்' குற்ற உணர்வு. Show all posts
Showing posts with label ஆன்மிகம்' குற்ற உணர்வு. Show all posts

Saturday, August 22, 2009

கடவுள்..... இறைவன்..... ஆன்மிகம்

இன்று கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்பதைப் பற்றி பலரும் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்....

தூற்றுவார் தூற்றட்டும்......
போற்றுவார் போற்றட்டும்......

நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழ்க்கை எனும் வண்டி ஓடிக்கொண்டிருக்கின்றது... அதை யாரும் மறந்து விட வேண்டாம்.

அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு.

'பூஜ்ஜியத்தின் உள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்..

அவனைப் புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்.'

கவிஞர் சொன்னது.....

இதோ கீழே வரும் பாடலைப் படியுங்கள்.

கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்

துடுப்பு கூட பாரம் என்று
கரையை தேடும் ஓடங்கள்

பிறக்கின்ற போதே....
பிறக்கின்ற போதே....இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய் தானே

ஆசைகள் என்ன ஆணவம் என்ன

உறவுகள் என்பதும் பொய் தானே

உடம்பு என்பது உண்மையில் என்ன

கனவுகள் வாங்கும் பை தானே


கனவு காணும் வாழ்க்கை யாவும்


காலங்கள் மாறும்...
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்

தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி

போனது போக எது மீதம்

பேதை மனிதனே கடமைகள் இன்றே

செய்வதில் தானே ஆனந்தம்.......

இதை புரிந்து கொண்டால் போதும்.... கடவுளைப் பற்றிய தேடல் அடங்கி விடும்.

//
RAD MADHAV said...

என் கருத்து எப்போதும் இதுதான்....

* மரணத்தின் நாழிகை முன்பே தெரிந்தால்?
* அடுத்த நொடி என்ன நிகழ்வு நிகழும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிந்தால்?

மனிதனிடம் கடவுள் நம்பிக்கை இருக்குமா என்பது சந்தேகமே....//

யோசிக்காமல் இப்படி ஒரு பின்னூட்டத்தை வெளியிட்ட குற்ற உணர்ச்சியைத் தணிக்கவே இந்தப் பதிவு......


Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog