
வாசகர் கடிதம்...
அன்பின் ராட் மாதவ்...
தங்களது படைப்புகளைத் தவறாமல் அடம் பிடித்து படித்தவன்.... படிப்பவன் நான்...
பித்துப் பிடித்து முற்றி... பைத்தியமாகத் திரிந்த என் நண்பன் ஒருவன் உங்களது படைப்புகளைப் படித்து இப்போது தெளிவடைந்து விட்டான்.. இதுவரை வீட்டில் வசித்து வந்தவன், இப்போது நிரந்தரமாக......கீழ்ப்பாக்கத்தில் குடியேறி விட்டான்....
உங்களது எழுத்து வடிவம் தமிழ் பின்...முன்..நவீனத்துவ உலகில் செய்து வரும் மாற்றங்களை என் வாயால் வர்ணிக்க முடியாது... என்பது விஸ்கியில் குதித்து பொங்கி நுரை ததும்பும் சோடா போல் மறுக்க முடியாத உண்மை...
எழுத வந்த சில மாதங்களிலேயே.... பிரபல பதிவர் என்ற பட்டம் உங்களைத் தேடி.. நாடி வந்து...இன்று உங்களிடமே அடைக்கலமாகி விட்டது....இது விந்தையிலும் விந்தை... வியப்பிலும் வியப்பு....
எப்படி உங்களால் மட்டும் சாதிக்க முடிகின்றது...
உங்களது எழுத்துக்களைப் படிக்கும்போது...
அதை எப்படிச் சொல்வது.....
ஒரு குவார்ட்டரை.... அப்படியே... ராவாக... உள்ளூக்குள் இழுக்கும் ஒரு சுகம்....ஆஹா....
இனி விசயத்திற்கு வருகின்றேன்...
இந்த உலகை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை....
இவ்வளவு திறம் மிக்க உங்களை இந்த உலகம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளாமல்... ஏன் இப்படி ஏசுகின்றது...
உங்களைப் பற்றி மிக மோசமான முறையில் ஏளனம் செய்கின்றது....
நீங்கள் என்னதான் பயனுள்ள படைப்புகள் அளித்தாலும், 'மொக்கை' என்று கேலி செய்கின்றனர்....
இமயம் முதல் குமரி வரை உங்கள் கால் படாத இடமில்லை..... வாழ்க்கையில் நீங்கள் காணாத எதுவும் உண்டா....
முடிந்தால் நீங்கள் எனக்கு உங்களைத் தூற்றுவோர் பற்றிய ஒரு லிஸ்ட் கொடுங்கள்.
முனியாண்டி விலாஸ் கூட்டிச் சென்று... மூக்கு முட்ட ஒரு குவார்ட்டரும், கோழி பிரியாணியும்.... வாங்கிக் கொடுத்து,
கூட்டமில்லாத இடத்திற்கு கூட்டிச் சென்று... முகத்தில் இஞ்ச் கேப்பில் ஒரு பஞ்ச் அடித்து விடுகின்றேன்...
இப்படிக்கு
தங்கள் வாழ்நாள் வாசகன்
மண்ணுக்குள் மைந்தன்...
**************************
இதற்கு என்ன பதில் எழுதலாம்...உங்களின் மேலான ஆலோசனைகள்
வரவேற்கப்படுகின்றது....

