எடக்கு மடக்காக யாராவது கேள்வி கேட்டு பதில் சொல்ல முடியாமல் திணறிய அனுபவம் உங்களுக்கு உண்டா?
இல்லை என்றால் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிப் பாருங்கள்.
* உலகில் இன்று அனைத்து நாடுகளுமே பொருளாதார சிக்கலில் தவிக்கின்றன. (அதாவது கடன் தொல்லை) சரி...... என்றால் இந்த பணம் அனைத்தும் எங்கு போனது????
** ஒலி, ஒளி இரண்டிற்கும் வேகம் உள்ளது.. என்றால் 'இருட்டின்' வேகம் எவ்வளவு????
*** நாய் எப்போதும் சும்மாவே இருக்கும். ஆனால் மனிதர்கள் ஏன் ' ஏண்டா நாய் மாதிரி வேலை பார்க்கின்றாய் ' என்று கேட்பது எதனால்????
**** கால்குலேட்டர், மொபைல், இரண்டிலும் எண் வரிசை ஏன் தலை கீழாக இருக்கின்றது????
***** மீன்களுக்கு என்றாவது தாகம் எடுக்குமா????
******வட்ட வடிவிலான ஒரு அறைக்குள் உங்களை எங்காவது ஒரு மூலையில் ஓரம் கட்ட முடியுமா????
*******எதுக்கெடுத்தாலும் 'ஓகே' 'ஓகே' னு சொல்றீங்களே.... இதுக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா????
********தண்ணீரில் மூழ்கிக்கொண்டு உங்களால் ஒரு பலூனை ஊத முடியுமா????
********* நாய்க்கு உணவு தயாரிக்கும் நிறுவனங்கள், புதிய தயாரிப்புகள் வெளியிடும் முன் முதலில் யார் அதை ருசி பார்த்து ஓகே சொல்வது????
********** தண்ணீருக்கு அடியில் நின்று அழுதால் உங்களுக்கு கண்ணீர் வருமா வராதா?????
போனஸ் கேள்வி:
*********** சில பிளாக்குகளில் உண்மையை சொல்லி பின்னூட்டம் போட்டால், சொல்லி வச்ச மாதிரி குரூப் குரூப் ஆ சேர்ந்துகொண்டு வீடு கட்டி அடிக்கின்றார்களே எதனால்?????
படிச்சிட்டு பத்தி சொல்லத் தெரியாம டென்ஷன் ஆக வேண்டாம்.
எனக்கு மெயில் அனுப்பினால் எல்லாவற்றிற்கும் துல்லியமான தெளிவான பதில் அனுப்பி வைக்கப்படும்.
ஈமெயில் உதவி - 'நன்றி துரை மாமா'
