படித்து விட்டு யாருக்காவது, ஏதாவது, எப்படியாவது வந்தால், நான், நாங்கள், நீங்கள் யாரும் பொறுப்பல்ல.......
அண்மையில் லண்டனில் பல்வேறு துறையை சேர்ந்த புகழ் பெற்ற
'டாப் டென்' நபர்கள் ஒன்று கூடி ஒரு மாநாடு நடத்தினார்கள்.
கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் பொருளாதார பிரச்சினை முதல், குறைந்து கொண்டிருக்கும் பெட்ரோல் விலை, ஏறிக்கொண்டிருக்கும் தங்கத்தின் விலை வரை, ஒன்றையும் அவர்கள் விடவில்லை.
எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்தார்கள். இதற்காகவே பில் கேட்ஸ் ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை தனியாக கொண்டு வந்தார்.
தனித்தனி துறையாக, பத்து பத்து பேராக மொத்தம் நூறு பேர். மொத்தம் பத்து
முடிவுகள்.
எல்லாவரும் அறிக்கையை பில் கேட்ஸ் கையில் கொடுக்க வாங்கிப் பார்த்தவர் ஸ்தம்பித்து விட்டார்.
மொத்தமாக எல்லா இனத்திலும் ஒரே ஆளின் பெயர்தான் முன்னில் இருந்தது.
அவரைப்பற்றி விசாரித்தபோது அதை விட ஆச்சர்யம்.
அவன் வெறும் இருபத்தி மூணே முக்கால் வயதுள்ள இளைஞன்.
வசிப்பது மத்திய கிழக்கு பாகத்தில்.
இவன் எப்படி???
எல்லாவற்றிலும் முன்னில்???
எல்லாவருக்கும் குழப்பம்.
சரி..... இவன் பெண்கள் விசயத்தில் எப்படி? உடனே ஒரு சர்வே.
ஓ மை காட் ......கடவுளே.... மிக நல்ல பய்யன்... படு சுத்தன்.
பில் கேட்ஸ் மூளையை பிசைந்தார்.
உடனே ஒரு புதிய பார்முலா உருவாக்கினார். அடுத்த அரை மணி நேரத்தில்
ஆன் லயனில் ஒரு சர்வே..... பெண்களிடம் அதுவும் உலகம் முழுவதும்.
டீன் ஏஜ் முதல் பல் போன கிழவி வரை...... 'உங்களுக்கு மிகவும் பிடித்த
கவர்ச்சிகரமான மனிதன் யார்?' - இதுதான் கேள்வி.
அடுத்த ஒரு மணி நேரத்தில் ரிசல்ட் வந்தது.
படித்த பில் கேட்ஸ் உடனே மயங்கி விழுந்து விட்டார்.
அப்படி என்னதான் ரிசல்ட்? கீழே படியுங்கள்.
பில் கேட்ஸ் பார்முலா இதுதான்.
- ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொள்ளுங்கள்.
- மனதை ஒரு நிலைப் படுத்துங்கள்.
- ஒரு கால்குலேட்டர் எடுத்துக்கொள்ளுங்கள்.
- ஒன்று முதல் ஒன்பதுக்குள் ஏதாவது ஒரு எண்ணை நினைத்துக்கொள்ளுங்கள்.
- மூன்றால் அந்த எண்ணை பெருக்குங்கள்
- மீண்டும் மூன்று கூட்டிக்கொள்ளுங்கள்
- மீண்டும் மூன்றால் பெருக்குங்கள்
- கிடைத்த எண்களை இணைத்து கூட்டுங்கள் (உதாரணம். பதினைந்து கிடைத்தால் (ஒன்று + ஐந்து = ஆறு)
- இந்த எண்ணுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிசைப்படி உள்ளவர்தான் 'உலகின் கவர்ச்சி நாயகன்'
- இந்த ரகசியத்தை வெளிப்படுத்தாமல் பாதுகாத்து கொள்ளுங்கள்.
*******
இவர்கள்தான் அந்த கவர்ச்சி நாயகர்கள்
| 1 | DANIEL CRAIG | |||
| 2 | PIERCE BROSNAN | |||
| 3 | SHARUKH KHAN | |||
| 4 | ORLANDO BLOOM | |||
| 5 | COLIN FARRELL | |||
| 6 | JOSH HARTNETT | |||
| 7 | DAVID BECKHAM | |||
| 8 | BRAD BITT | |||
| 9 | RAD MADHAV | |||
| 10 | JENSON BUTTON | |||
