Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Monday, January 19, 2009

என் காதலி......


என் இனிய தமிழ் வலைப் "பெருங்குடி" மக்களே! காலை, மாலை, இரவு வணக்கம். இது ஒரு தொடர் கவிதை. தினம் தினம் மெருகு கூடிக்கொண்டே இருக்கும். ஒரு முறை பார்த்த நீங்கள் மறுமுறை வரும்போது மாற்றங்கள்
நிறைய இருக்கும்.
இது என் சொந்தப் படைப்பு. படியுங்கள்... உருகுங்கள்... அழுங்கள்....சிரியுங்கள்.... என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால், தயவுசெய்து கமெண்ட் மட்டும் போட்டு என்னை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று விடாதீர்கள்......?????

தனிமையிலும்
நீ எனக்கு
பிரியமானவள்,

The moment you passed by
I felt a thrill!!!!!
When you caught my eye
My heart stood still!!!!!

உனை நினைத்து
என் விழி இமைகளும்
இதயத் துடிப்புகளும்.... ஏன்.....
கையில் கட்டிய கடிகாரமும் கூட
வேலை நிறுத்தத்தில்........
உளறுவாயன் என்று
பெயர் சூட்டப்பட்டவன் நான்???
உன்னால் இன்று
வாய் கூட
மௌன விரதம் பூண்டு
வார்த்தைகளை
திக்கி திக்கி
துப்புகிறது........

எங்கிருக்கிறாய் நீ?
காதலின் சங்கமம் காமம்
என்றறிந்த பின்னும் கூட
கண்ணுக்குள் நிலவாய் நீதான் இருக்கிறாய்....
கடலில் வீழ்ந்து மீண்டவருண்டு....
காதலில் வீழ்ந்து மீண்டவருண்டோ?
உன் திருவாய் மலர்ந்து
ஒரு சொல் உதிர்ந்தால் போதும்.
பாலைவனத்தில் வீழ்ந்த
சிறு
பனித்துளி போல்
என் காதல் வேர்கள் உயிர் பிடிக்கும்.

(தொடரும்...)
Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog