மனமே.......
தோல்வியைக்கண்டு
ஒரு போதும் துவளாதே...
ஒரு வாசல் அடையும்போது
ஒன்பது தானாக திறக்கும்.
எறும்பு ஊற கல்லும் தேயும், பின்
இமயம் உன் முன் எம்மாத்திரம்?
ஞாயிறு உறங்கலாம்
ஞானத்தை உறங்க விடாதே
நிலவு தேயலாம்
நிஜத்தை தொலைத்து விடாதே
புலி கூட பதுங்குவது
பாய்வதற்குத்தான்
விதை கூட
மண்ணுக்குள் குழித்தால் தானே
மரமாகிறது
இலைகள் உதிர்வது கண்டு
மரங்கள் என்றாவது அழுததுண்டா?
பூக்கள் போல்
ஒழுகும் வியர்வையில்
உதாசீனங்களை களைந்து விடு
பணியாத துணிவை
மனதில் திணித்து விடு
உன்னால் முடியும்
முயன்று பார்
உலகம் உன் கையில்.........
8 அன்பு உள்ளங்கள்....:
@ Simple
aaga arumai arumai...kavithai kavithai... (gUNA kamal style)...
in simple words- THOLVI NILAYENA NINAITHAAL MANITHAN VAALALLAMA??
mikka nanri thalaiva, sathiyama enakku kavithai yeluthi palakkamillai. unmayai cholkiren. idhu oru muyarchithaan.
Nalla kavithai, nichchayam, thannampikkai valarukkum
nice poem... superb.. post more poems...
:)
//பணியாத துணிவை
மனதில் திணித்து விடு
உன்னால் முடியும்
முயன்று பார்
உலகம் உன் கையில்.........//
மாதவ்,உங்கள் பக்கம் முதன்முதல் வந்திருக்கிறேன்.துணிவு தரும் நம்பிக்கை வரிகளோடு ஆரம்பிப்போம்.தன்னம்பிக்கை தரக்கூடிய வரிகள்.
அருமை.வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை. வெற்றி நிச்சயம்.
Post a Comment