



சச்சின்...நீதான் எங்கள் உண்மையான, தல, சூப்பர் ஸ்டார், உலக நாயகன் எல்லாம்.
வருடங்களாக எங்கள் நெஞ்சில் ஒரு ரணம் நீறு பூத்த நெருப்பாக எரிந்து கொண்டிருந்தது. பாகிஸ்தானின் சயீத் அன்வர் உருவாக்கியது...
அதை பச்சிலை மருந்து கட்டி, பக்குவமாக குணப்படுத்தி, மாயாத வடுவைக் கூட சாதனை எனும் முத்திரையாக மாற்றி சாதித்து விட்டாய்.
இந்தியாவுக்கு, கிரிக்கெட்டுக்கு, விளையாட்டுக்கு, மற்றும் எங்களுக்கும் உன்னால் பெருமை.
நீ வாழ்க...நீடூழி வாழ்க.. வளர்க்க... என்றும் உன்னுடன் நாங்கள்.
