இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அழகான மாலை நேரம். பேருந்து செயங்கொண்ட சோழபுரத்தை நோக்கி புறப்படத் தயாராக இருந்தது. 30 பேர் கொண்ட குழுவில் ஒருவர் மட்டும் வர வேண்டி இருந்தது. அவசரமாக ஓடி வந்து ஏறினாள் சக்தி. ஓட்டுனர் ஜீவாவைப் பார்த்தார். ஜீவா தலையசைத்தான். பேருந்துப் புறப்பட்டது.
அலுவலகத்தில் குழு முடிவு செய்து விட்டது ஜீவா தான் இந்தக் குழுவை வழி நடத்த வேண்டும்.
தமிழ் நாட்டில் உள்ள முக்கிய ஊர்களுக்குச் சென்று, அந்த ஊர் மக்களின் தேவைகளைப் பற்றி ஆராயந்து ஜீவாவும், அவனுடன் இணைந்து தமிழ் நாட்டில் உள்ள மற்ற கிளை அலுவலகத்திலிருந்து ஒவ்வொருவர் மொத்தம் 30 பேர் ஒரு அறிக்கை சமர்பிக்க வேண்டும். அந்த அறிக்கையின் முடிவை வைத்து, எந்த மாதிரியானப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டுமென நிறுவனம் முடிவு செய்யும்.
ஜீவா தான் இளம் வயதிலேயே அந்த நிறுவனத்தில் உயர் பதவி வகிப்பவன். அதற்குக் காரணம்
அவனது விடாமுயற்சியும், உழைப்பும் மட்டும் தான் காரணம். எதையும் ஆராய்ந்து செய்வதால்,வெற்றி மட்டும் காண்பவன் என்று எல்லோரும் சொல்வார்கள். அவன் மூளையின் வெற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவன் இதயத்தின் தோல்வி அவனுக்கு மட்டும் தான் தெரியும்.
சக்தி ஜீவாவின் பக்கதில் வந்து உட்கார்ந்தாள். ஜீவா சன்னலின் வழியே, பின்னால் போகும் மரங்களையும், அழகான முழு நிலவையும் ரசித்தான். எப்பொழுதும், தன் கூடவே வரும் நிலவைப் பார்ப்பது ஜீவாவிற்குப் பிடிக்கும். பக்கத்தில் உட்கார்ந்திருந்த சக்தியைக் கவனிக்கவில்லை ஜீவா. எப்படி இருங்கீங்க ஜீவா? என்று கேட்டாள் சக்தி.அவளை ஆச்சர்யமாய் பார்த்தான் ஜீவா. ஒவ்வொரு கிளை அலுவலகத்திலிருந்தும் ஒவ்வொருவர் வந்துள்ளதால் ஒருவரை மற்றவருக்குத் தெரியாது. இவள் யார்? தெரிந்தவள் போல் பேசுகிறளா? அதுவும் ஒரு பெண். அது தான் ஜீவாவின் ஆச்சயர்த்துக்குக் காரணம். தோழிகளே அவனுக்குக் கிடையாது.
நான் சக்தி. நீங்க நம்ம கல்லூரியில இறுதி ஆண்டுப் படிக்கும் போது, நான் இரண்டாம் ஆண்டுப் படித்துக் கொண்டிருந்தேன். உங்களுக்கு என்னைப் பற்றி தெரியாது. ஆனா உங்களை பற்றி எனக்குத் தெரியும். எப்படினா? கல்லூரில உங்களைத் தெரியாதவங்கயாரும் இருக்க முடியாது. ஜீவா பெயர் இல்லாத இடமே கிடையாது. எல்லாத்துலையும் நீங்க தான் முதலாவதாக வருவீங்க.படிப்பு, விளையாட்டு எல்லாத்துலையும் ஜீவா பெயர் தான். பின்னர் எப்படி தெரியாமல் இருக்கும். ஆனா, பெண்கள் கூட தான்பேச மாட்டீங்க, என்று சொன்னாள் சக்தி.
சிரித்துக் கொண்டே சொன்னான் ஜீவா. சக்தி உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு. நீ ரொம்ப அழகு. கொஞ்சம் வெகுளி. அவ்வப்போது, சன்னலின் வழியே வானில் நிலவைப் பார்த்துக் கொண்டான். அப்படி இல்லை சக்தி, நான் சின்ன வயசிலிருந்தே படிச்சது எல்லாம் பசங்க மட்டும் படிக்கிறப் பள்ளிக்கூடம் தான். அதனால் தான் என்னவோ, பொண்ணுங்கக்கூட பேசுறது இயல்பா எனக்கு வரவில்லை. ஆமா? நான் உன்ன நம்ம கல்லூரியில் பார்த்ததாய் நினைவே இல்லை? என்று கேட்டான் ஜீவா.
சிரித்தாள் சக்தி. உங்களைத் தவிர எல்லோரும் பார்ப்பாங்க. உங்களுக்குத் தான் புத்தகத்தையும், உங்கள் சுவேதாவையும் விட்டால் ஒன்றும் கண்ணுக்குத் தெரியாதே. தெரியாது. தெரிந்துக் கொள்ளவும் விரும்ப மாட்டீர்கள்.
அதிர்ச்சியானான் ஜீவா. பேருந்தும், தீடீரென நின்றது. சட்டென எழுந்துப் போனான் ஜீவா. அவன் கண்களின் ஓரம் கண்ணீர், கவனித்து விட்டாள் சக்தி. அனைவரும் எழுந்து சாப்பிடப் போனார்கள். சக்தி அவனுக்காக காத்திருந்தாள். அனைவரும் சாப்பிட்டு விட்டு ஏறினார்கள். ஜீவா கடைசியாக ஏறினான். ஆனால், அவன் சாப்பிடவில்லை. அவன் இருக்கையில் அமர்ந்தான்.
என்னாவாயிற்று ஜீவா? தயவு செய்து சொல்லுங்க என்று கேட்டாள் சக்தி. தன்னைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் அவளைப் பிடித்திருந்தது. அவளிடம் சொல்வதென முடிவு செய்தான் ஜீவா. ஆமா, உனக்கு என் சொந்தக் கதை எப்படி தெரியும்? என்றுக் கேட்டான் சக்தியிடம்.
தெரியும். உங்கள் அறையில் தங்கி இருந்த சிவா என் நண்பன். நங்கள் இருவரும் பள்ளியிலிருந்தே நண்பர்கள். அவன் தான் சொன்னான் என்றாள். அவன் தான் எல்லாவற்றுக்கும் காரணமா? அவனைப் பார்த்துக் கொள்கிறேன், கோவப்பட்டான் ஜீவா.கோவப்படாதீங்க ஜீவா சொல்லுங்க, சுவேதா எங்கே? சொல்றேன். சுவேதா ஒரு விபத்தில் இறந்து விட்டாள். அவளை மறக்க முடியமால் அவள் நினைவுகளோடு வாழ்கிறேன். இப்பக்கூட என் பையில் அவள் கொடுத்த வாழ்த்து அட்டை,கடிதங்கள், புகைப்படம், அவளை பார்க்கப் போனப்ப எடுத்த பயணச்சீட்டு இன்னும் நிறைய எங்கிட்ட இருக்கு. அதில், நான் எப்பவும் அவளைத் தேடிக்கிட்டே இருக்கேன் என்றான் ஜீவா. எனக்கு உங்க அன்பைப் பற்றி தெரியும்.நான் மட்டும் உங்கக்கிட்ட முன்னாடியே பேசி, பழகி இருந்தால் உங்களைத் தான் காதலித்து இருப்பேன் என்று உணர்ச்சி வசப்பட்டாள் சக்தி.
ஜீவாவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளின் உயிருள்ள வார்த்தைகள் சவப்பெட்டிக்குள் இருந்த ஜீவாவின் இதயத்தை லேசாகத் துடிக்க வைத்தது. தன்னைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருக்கும் அவளைக் கொஞ்சம் பிடித்திருந்தது. யோசிக்காமல் கேட்டான், என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா? சக்தி. அவளும் யோசிக்காமல் சொன்னாள் காதலிக்கிறேன் ஒருவரை மூன்று வருடமாக என்று. அந்த இடத்தில் அமைதி ஆட்கொண்டது. ஜீவாவின் இதயம் இருத்த இடத்தில், அதற்க்கானச் சுவடுகள் இல்லை. ஆனாலும் உயிருடன் இருந்தான்.
என்னை மன்னித்து விடுங்கள் ஜீவா. நான் அப்படி சொன்னது தான் காரணம் நீங்கள் கேட்டு விட்டீர்கள்.உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்கள் என் நண்பனாய் இருக்க வேண்டும் கேட்டாள் சக்தி.பேச முடியாமல் தலையசைத்தான் ஜீவா.
ஆமாம் உன் காதலைப் பற்றி சொல்லேன். பேச்சை மாற்றினான் ஜீவா. அதுவா? அவள் முகம் மாறியது.வேற ஏதாவது பேசலாம் ஜீவா. இப்ப சொல்றீயா? இல்லையா? கோவத்துடன் கேட்டான் ஜீவா.
சரி சொல்றேன். எனக்குத் தாய் இல்லை. சிறு வயதிலேயே இறந்து விட்டாள். நான் பள்ளிப்பருவத்தை முடித்தவுடன் ஒருவன் காட்டிய அன்பில், அவனிடம் காதலில் விழுந்தேன். முதலில் அன்பாய் இருந்தவன், என்னை அவனிடம் இழந்த நாள் முதல் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. என் தாய் அன்பாய் இருந்தாள். அவளை இழந்த நாள் முதல்அன்பை இழந்தேன். இப்பொழுது, மறுபடியும் அன்பை தேடுகிறேன். நீ என் நண்பனாய் இரு, என்றுக் கேட்டாள் சக்தி.
அவளின் நிலைக் கண்டு, அவளை அதிகமாகவே காதலிக்க ஆரம்பித்து விட்டான் ஜீவா, போனது போகட்டும் விடு சக்தி.காதலின் உருவங்கள் மாறுவதில்லை, அது நம் இதயத்தைப் போல. அதைக் கொண்டிருக்கும் உருவங்கள் தான் மாறுகின்றன. அது நம் முகத்தைப் போல. நீ சரி என்றுச் சொன்னால், நான் எப்பொழுதும் உனக்கு நல்லக் கணவனாய் இருப்பேன், என்று கேட்டான் ஜீவா, பேருந்து திடீரென நின்றது. எதுவும் சொல்லாமல், எழுந்து சென்றாள் சக்தி. அவளின் பதிலுக்காக, அப்படியே காத்திருந்தான் ஜீவா. படிக்கட்டில் திரும்பி ஏறும் ஒவ்வொரு உருவங்களிலும் சக்தியைத் தேடினான். அவள் இறுதியாக ஏறினாள்.
ஜீவா அருகே வந்து, அவள் இருக்கையில் வைத்திருந்த அவள் பைகளை எடுத்துக் கொண்டு நான்கு இருக்ககைகள் தள்ளிப் பின்னால் போய் அமர்ந்தாள். அவனுக்கு என்னவோ போல் ஆனது. ஜீவாவின் இதயம் அவனுக்குள் கதறியது.இழந்தது தோழியா? காதலியா? என்று....
சன்னலின் வழியே வானில் நிலாவைத் தேடினான். அது மேகத்துக்குள் மறைந்திருந்தது. திரும்பி வருமென நம்பினான். திரும்பி பின்னால் உட்கார்ந்திருந்த சக்தியைப் பார்த்தான். அவள் முகத்தைப் படித்தான். அவள் அழகு, கொஞ்சம் வெகுளி அதை விட ரொம்ப நல்லவள் என்று புரிந்தது, நல்லவர்கள் எப்பொழுதும் ஒரு பாதையில் போக ஆரம்பித்து விட்டால், நல்லதோ?கெட்டதோ? அதே பாதையில் போக விரும்புகிறவர்கள். ஆண்டவன் அவர்கள் வழியை மாற்றினாலும், அவர்கள் அதைபுரிந்து கொள்வதில்லை, ஆண்டவன் எவரையும் சோதிப்பதில்லை, கடவுள் மனிதனை படைப்பதோடு சரி, ஆண்டவனுக்கும்,மனிதனுக்கும் உள்ள உறவு அவன் பிறக்கும் போதே முடிந்து விடுகிறது, மனதுக்குள் புலம்பினான் ஜீவா.
திடீரென ஒரு குரல் கேட்டது. நான் இங்க உட்கார்ந்து கொள்ளலாமா? பின்னால் உட்கார்ந்து இருந்தேன். பள்ளத்தில் தூக்கி தூக்கி போடுகிறது. ஒரு பெண் குரல்.
பேச முடியாமல் தலையசைத்தான் ஜீவா.
அவள் அமர்ந்தாள்.
நான் நிலா. உங்க பெயர் என்னென்னு தெரிந்து கொள்ளலமா?
பெயரைக் கேட்டு தலை நிமிர்ந்தான் ஜீவா. உங்க பெயர் என்ன சொன்னீங்க??? என்று கேட்டான் ஜீவா...
நிலா....
ஜீவா சன்னலின் வழியே வானில் நிலாவைத் தேடினான். அது மேகத்தை விட்டு வெளியே மெதுவாக வந்து கொண்டிருந்தது.....
வாழ்க்கையில் சில பயணங்கள்......
பயணங்களில் சில நிறுத்தங்கள்.....
நிறுத்தங்கள் நிரந்தரமானவை அல்ல.....
போன நிறுத்தத்தில் அவள் இறங்கி கொண்டாள்......
இந்த நிறுத்தத்தில் இவள் ஏறி கொண்டாள்.....
வாழ்க்கை என்ற பேருந்து முன்னோக்கிச் செல்கிறது.....
நீ பயணித்தாலும், நீ பயணிக்கா விடிலும்.....
இழப்பு உன் வாழ்க்கையில் இல்லை......
அது உன் இறப்பில் இருக்கிறது.......
அது தான் உன் வாழ்க்கையின் கடைசி நிறுத்தம்....
எதையாவது ஒன்றை இழக்கும் போது ஜீவா தனக்குத்தானே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகள்..
திரும்பி நிலாவைப் பார்த்தான். நான் ஜீவா.
பேருந்து செயங்கொண்ட சோழபுரத்தை அடைய இன்னும் ஒரு மணி நேரம் மீதி இருந்தது....
நிலாவைத் தேடி,
Arun Jeevan.S
http://naan-aval-nila.blogspot.com/2009/12/blog-post.html
3 அன்பு உள்ளங்கள்....:
நான் தான் முதலாவதா? ....அழகான் கதை.....எழுதி செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும்.
விதி வழி வாழ்வு எழுதப்ட்டுக்கொண்டே இருக்கிறது.வாழ்த்துக்களும் பாரட்டுக்களும். நட்புடன் நிலாமதி
vetri pera valthukkal.
கதை வாசிக்கும் போது ஏதோ ஒரு விதமான அதிர்வு
என் இருதயத்தினுள்,,, நானும் நிலவை வானத்தில் தேடினேன்,,,
by, Pasilan Babu
Post a Comment