இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
2010 சனவரி 13 சென்னை எழும்பூர் புகைவண்டி நிலையம்:. மயிலாடுதுறைக்கு செல்லும் வண்டி 8வது நடைமேடையில் இருந்து 10 மணி 30நிமிடத்திற்கு புறப்படும் என்ற அறிவிப்பைக்.கேட்டு கொண்டே ஆனந்த விகடன் வாங்கிக கொண்டிருந்தான் வேலு.
வேலு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளன். பொங்கல் திருநாள் விடுமுறையுடன் சேர்த்து தனக்கு பெண் பார்க்கும் ஏற்பாட்டிற்காகவும் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு செல்வதற்கு ஆயத்தமாக எக்மோர் நிலையத்திற்கு வந்து சேர்ந்தான். மயிலாடுதுறைக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அகலப்பாதை பணிகள் முடிந்து இன்றுதான் முதல் முறை புகைவண்டி இயக்கப்படுகிறது.
9 மணி 30 நிமிடம்: வண்டியில் ஏறி தனது இருக்கையை தேடிப்பிடித்து அமர்ந்து விகடனை படிக்கத் தொடங்கினான். வெளியில் ஒட்டப்பட்டிருந்த பயணிகள் இருக்கை விபரத்தை பார்த்து கொண்டிருந்த 4 பெண்கள் தனியாக நின்று கொண்டிருந்த ஐந்தாமவளிடம் "ஏய் சந்தியா அந்த 6வது இருக்கை(சீட்) ஒரு பையன்டி" என்றதும் "இதே வேலையா போச்சு உங்களுக்கு வாங்கடி உள்ள" என்று சொல்லி விட்டு உள்ளே சென்றாள் சந்தியா.
தனது இருக்கையின் எதிரே அமர்ந்திருந்த வேலுவுக்கு வணக்கம் (ஹாய்) சொல்லிவிட்டு அமர்ந்தாள் சந்தியா.பின்னால் வந்த தோழிகள் "என்ன சந்தியா எங்களுக்கு முன்னாடியே வந்து மச்சான கவுத்துட்ட போல" என்று சொல்லி கொண்டே வந்து இருக்கைகளில் அமர்ந்தனர். இந்த ஐந்துப் பெண்களும் சத்தியபாமா கல்லூரியில் மென்பொருள் பொறியியல் இறுதியாண்டு மாணவிகள்.
அதில் ஒருத்தி வேலுவிடம் "மச்சான் எங்க போறீங்க" என்றாள். விகடனை விலக்கி மயிலாடுதுறை என்றான். "ஏய் சந்தியா நீதான் முதல்ல ஏறுன கடைசி வரைக்கும் மச்சான் கூட போகப் போற! வண்டியில சொன்னன்டி" என்றவளை சந்தியா அதட்டினாள். சந்தியாவுக்கு மயிலாடுதுறை, மற்ற 4 பேரும் செல்லும் வழியில் உள்ள சிதம்பரத்தில் இறங்கி விடுவர்.
அனைவரும் கேலி செய்த போதும் புன்னகையயும் வெட்கத்தையும் மட்டும் பதிலாக அளித்து விட்டு அமைதியாக ஏ.ஆர். ரகுமான் இசையை அலைபேசி உதவியில் கேட்டு கொண்டிருந்த சந்தியாவின் மவுனம் அவனுக்குப் பிடித்திருந்தது. முதல் பார்வையில் காதலை சொன்னவர்கள் குறைவுதான். வேலுவும் அந்த ரகம் தான்.
பயணத்தின் போது வைத்திருந்த உணவு பண்டத்தை பகிர்ந்து கொண்டிருந்த சந்தியா "நீங்களும் எடுத்துக்குங்க" என்று வேலுவிடம் சொன்னாள். தோழிகள் மீண்டும் இருவரையும் இணைத்து கேலி செய்ய பயணம் கேலி, கிண்டல் கொஞ்சம் உறக்கத்துடன் சென்று கொண்டிருக்க சிதம்பரம் வந்தது. வேலுவிடமும் சந்தியாவிடமும் கேலி கிண்டலுடன் தோழிகள் விடை பெற்றனர்.
சிதம்பரம் தாண்டிய பின் சந்தியா "என்னுடைய தோழிகள் இவ்வளவு கேலி செய்த போதும் பொறுமையாகவும், மவுனமாகவும் அவர்களுக்கு பதில் சொன்னீங்களே...உங்களுக்கு கோபமே வராதா?" என்றாள். அதற்கு புன்னகையை பதிலாக அளித்து விட்டு இவன் ஏ.ஆர்.ரகுமான் (இப்போது ஆனந்த விகடன் அவள் கையில்) பாடல் கேட்க ஆரம்பித்தான். அவனின் அந்த பொறுமை அவளுக்கு பிடித்திருந்தது. உண்மையில் சொன்னால் அவளும் வேலு ரகம் தான்.
ஊர் வந்ததும் இருவரும் இறங்கி காதலை சொல்லாமல் புகைவண்டி சினேகிதர்களாக பிரிந்தனர். பொங்கல் திருநாள் முடிந்து மூன்றாவது நாள் வேலுவுக்கு பெண் பார்க்கும் படலமாக பெண் வீட்டிற்கு சென்றனர். கையில் காபியுடன் வந்த பெண்ணைப் பார்த்து விட்டு அம்மாவிடம் "பொண்ணு கிட்ட கொஞ்சம் பேசனும்" என்றான்.
இருவரும் வீட்டின் பின்புறமிருக்கும் கிணற்றடியில், வேலு அவளிடம் "சந்தியா நான் உன்னை காதலிக்கிறேன்" என்று தன் புகைவண்டி காதலை சொன்னதும் சந்தியா வெட்கத்தை சம்மதமாக கொடுத்து விட்டு உள்ளே ஓடினாள்.
பி.கு: இந்த சிறுகதையை “செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டிக்கு அனுப்பியுள்ளேன்.
http://pulavanpulikesi.blogspot.com/2009/11/blog-post_26.html
மின்னஞ்சல் : mail2velu.b@gmail.com
அலைபேசி: 9940739253
முகவரி: 71/34A, ஏரிக்கரை சாலை,
மேற்கு மாம்பலம்,
சென்னை-33
3 அன்பு உள்ளங்கள்....:
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
:-)))))
வாழ்த்துக்கள் நண்பரே...
Post a Comment