Sunday, December 27, 2009

பரிசுப்போட்டி... சிறுகதை 25

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
2009 ...., மீண்டும் ஓர் மழை நாள்..,

"மழை இருந்தாலும் பரவால்ல ஊருக்கு வந்துடவா ?" என்று ஆறாவது முறையாய் அலைபேசியில் கேட்டாள்.வேண்டாம் என்று அத்தனை முறையும் தடுத்து விட்டான். அவள் அண்ணன் மகள் திருமணத்திற்காக மூன்று வயது மகனையும் ஐந்து வயது மகளையும் கூட்டிக்கொண்டு ஊருக்கு போனவள் ஆடைமழை அங்கேயே தங்கவைத்து விட்டது.இந்த நாட்களில் சாப்பாட்டுக்கு சற்று சிரமப்பட்டு தான் போய்விட்டான்.மழை பெய்து கொண்டிருந்ததால் குடையுடன் பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க தொடங்கினான் "பள்ளி கல்லூரிக்கெல்லாம் விடுமுறை...ஆனா நாம வேலைக்கு போகணும் "என்ற முனகலோடு ...,

1995 ...,ஓர் மழை நாள்..,
"இவ்வளோ மழை பெய்யுதே இன்னிக்குமா பரீட்சை வைக்கணும் .., நாதாரிங்க தள்ளி வைக்க கூடாதா" என்று கொஞ்சம் சத்தமாகவே திட்டி கொண்டிருதான் .பேருந்து வந்தது பெரிதாக கூட்டம் இல்லை ஆனாலும் படியில் நிற்க முடியாது என்ற காரணத்தினால் படியிலும் நிற்காமல் உள்ளேயும் செல்லாமல் ஓர் இடைப்பட்ட இடத்தில் நின்று கொண்டான்.எதேட்சையாய் திரும்பிய போது
அவளை பார்த்தான் சற்று அடிக்கும் சிகப்பு நிறத்தில் நாகரிக வெளிப்பாடாய் சுடிதார் அணிதிருந்த தேவதையை...,

பேருந்து வந்து விட்டது .சற்று கூட்டம் அதிகம் தான் எனினும் படியில் யாரும் நிற்காத காரணத்தால் கொஞ்சம் நிம்மதியாகவே ஏறினான்.உள்ளே செல்ல முடியாத அளவிற்கு கூட்டம் இருந்ததால் படிக்கு பக்கத்திலேயே நின்று கொண்டான்.எதேட்சையாய் திரும்பிய போது பார்த்தான் அவளை சற்று அடிக்கும் சிகப்பு நிறத்தில் ஆங்கிலத்தில் கிறுக்கப்பட்ட பனியனும் ஜீன்சும் அணிந்திருந்த தேவதையை.இரண்டாம் முறை பார்த்த போது தான் பொறி தட்டியது அட.., இது அவளே தான் ஆனால்..,

இரண்டாம் முறை திரும்பிய போதே கவனித்து விட்டாள்.அத்தனை மழையிலும் சுட்டது அந்த பார்வை எனினும் இவன் பார்வையை திருப்ப அந்த சூடு போதவில்லை.குளிருக்கு இதமாய் சிறு சிறு இடைவெளியில் சுடும் நெருப்போடு பயணத்தை தொடர்ந்தான் கல்லூரியை கடந்தான் பரிட்சையை மறந்தான்.அவள் இறங்கிய இடத்தில் இறங்கினான் பெயர் கேட்டான் பிய்ந்துவிடும் என்றாள்.

ஆனால் அவள் மகளாய் இருக்குமோ இல்லையே இவ்ளோ பெரிய மகள் இருக்க வாய்ப்பில்லையே .. அப்போ அவளோட தங்கையா இருக்குமோ இல்ல அவளே ஓவர் மேக் அப்ல வந்து இருக்காளா.., குழப்பத்துடன் அவள் பனியனில் உள்ளதை படிக்க தொடங்கிய போது சுட்டது...

தைத்து கொள்ளலாம் என்று மொக்கை போட்டன் ., சிரிக்க துடித்த உதடுகளை கடித்த படியே ஒழுங்கா போய்டு எங்க ஏரியா .., என்று முடிக்கும் முன் நான்கு கண்கள் முறைப்பதை உணர்ந்து திரும்ப நினைத்த போது..,
அவளுடைய பார்வை.., அவனை தானா என்று திரும்பி பார்த்து கொண்டான். கண்டிப்பாக நிச்சயமாய்அவனை தான் .அப்புறம் அவள் பனியனை அவ்வளவு நேரம் பார்த்து கொண்டிருந்தால் முறைக்காமல் என்ன பண்ணுவாள்.தன்னுடைய கைப்பைக்குள் கை விட்டாள்...,

முதுகில் விழுந்தது முதல் அடி அதன் பிறகு கணக்கு இல்லை.., நான்கு கைகள் அவன் உடம்பில் சதிராடி விட்டன..,ஆஸ்பத்திரியில் படுக்க வைத்து விட்டனர்.., மூன்றாம் நாள் மழை குறைந்திருந்த போது அவள் வந்தாள் ..., அழுதாள் மொக்கை போட்டு சிரிக்க வைத்தான் அடுத்த நாளும் வந்தாள் ..,
செல் போனை எடுத்து கண்களால் இவனை சுட்ட படியே பேசினாள்.., பேசி முடித்து திரும்பி பார்த்தாள்..,அங்கு இன்னும் நான்கு கண்கள் இவனை முறைத்த படி இருந்தன .திரும்பி நின்றுக்கொண்டான் ..,

காதலிக்கிறேன் என்றான்.., சிரிக்கவும் இல்லை அழவும் இல்லை மௌனமாய் இருந்தாள்.., கொஞ்ச நேரம் கழித்து போய்விட்டாள்.., அடுத்த நாள் சாப்பாடு கொண்டு வந்தாள் சிரித்த படியே..,

பழைய ஞாபகம் வந்துவிட்டது அவனுக்கு ...,சீ.. பாத்ததுக்கெல்லாமா அடிப்பாங்க.., திரும்பி பார்க்கலாமா என்று நினைத்த போது..,
நாளை வீட்டுக்கு செல்வதாக சொன்னவன் அப்படியே நேற்றைய கேள்விக்கு பதில் கேட்டான் . நாளைக்கு சொல்வதாக சொல்லிவிட்டு போனாள்.மதியம் கிளம்ப வேண்டியவன் மாலை தான் கிளம்பினான் அதுவரை வரவே இல்லை...,
ஒரு கை அவன் தோளில் அழுத்தமாக பதிந்தது.., அந்த கை.., அந்த கை அவளுடைய கையாகவும் இருக்கலாம்.., அவர்களின் கையாகவும் இருக்கலாம்.., டிக்கெட் கேட்டு கண்டக்டரின் கையாகவும் இருக்கலாம்.., யார் கையா இருக்கும்??????
--------*****************-----
---------------*****************-------------------------------------******************
பெயர் : - ஆனந்த் [ பேநா மூடி]
தளம் :- http://peenamoodi.blogspot.com

0 அன்பு உள்ளங்கள்....:

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog