இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
உனக்குள் நான்...எனக்குள் நீ
சதீஷ் மிகவும் துடிப்புள்ள,புத்திசாலியான பையன்..துருதுருவென எல்லாரையும் ஈர்க்கும் முக அமைப்பை பெற்றவன்...அவனுக்கு இப்பொழுதுள்ள கம்பெனியைவிட வேறொரு பெரிய நிர்வாகத்தில் நேர்முகத்தேர்விற்கு அழைப்பு வந்திருந்தது.அதற்கான பயணம்தான் இது..இந்த பயணம் அவன் விதியையே மாற்றப்போகும் பயணம் என்று அவன் அறிந்திருக்கவில்லை
சதீஷ் கிளம்பி ரயில் நிலையத்திற்கு வந்தான்.
பயண அட்டைவணையில் அவன் பெயர் உள்ளதா என் சோதித்து விட்டு ஏறினான்,அங்கே ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது என அறியாமலே...
சுஜாதா...அவனின் ஒவ்வொரு அணுவும் பல மடங்கு பெருகும் சக்தியை கொடுக்கும் பெயர் அதுவாகத்தான் இருக்கும்....கனவிலும் அவன் நினைக்கவில்லை,அவளை சந்திப்பான் என்று.
"இனிமேல் என் முகத்தில் முழிக்காதே"இதுதான் அவள் கடைசியாக சொன்னது..
இன்று அவளே அவன் எதிரில்....உட்கார்ந்து இருந்தாள்.
இவன் முகத்தில் மகிழ்ச்சி கலந்த துக்கம் வெளிப்பட்டது,கண்ணீராக...தெரியா
அவள் சன்னலை விட்டு பார்வையை விலக்கவில்லை.முன்னோக்கிய ரயில் பயணத்தில் பின்னோக்கிய சிறு நினைவுகள்.
இருவரும் முதல் வருடத்திலிருந்து நட்பாக பழக ஆரம்பித்தனர்.சுஜாதா நட்பாக பழகினாலும் சதீஷ் அவளை காதலித்தான்.அவன் காதலை பொத்திபொத்தி வைத்து இருந்தான்..எங்கே சொன்னால் அவனது நட்பு பாழாகி விடுமோ என்ற பயத்தில்..நான்காம் ஆண்டு வந்த போது இவன் நண்பர்களிடம் சுஜாதாவை காதலிப்பதாக கூறினான்.ஆனால் யாரோ கல்லூரி சுவற்றில் அவர்கள் இருவரின் பெயரையும் எழுதி வைத்து விட்டார்கள்.அதை அவர்கள் கல்லூரி முதல்வர் பார்த்து அவர்கள் பெற்றோரை வரவழைத்து கூறி விட்டார்..சுஜாதா தான் அவனை காதலிக்கவில்லை என்று அழுது புலம்ப அவள் அப்பா நம்பவில்லை...அவளிடம் பேசுவதை விட்டுவிட்டார்.அவள் படிப்பு முடியும் வரை அவனிடம் பேசக்கூடது என்று சத்தியம் வாங்கிய பின்னரே அவளை கல்லூரிக்கு அனுப்பினார்.எல்லாம் இவனால் வந்தது என கோபமுற்றாள்.அவன் தான் செய்யவில்லை என்று சொல்ல முற்பட்டபோதுதான் அவள் கூறிய வார்த்தை அது....
ஆனால் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் அவனை பிரிய நேரிட்டபோதுதான் அவளுக்கும் தான் சதீஷை காதலிப்பது புரிந்தது..மனதோடு உருகினாள்,அவன் பிரிவால்..ஆனால் அவளுக்கு அவனை சந்திக்கும் வாய்ப்பு அமையாததிற்கு அவள் தந்தையின் கண்டிப்பும் ஒரு காரணமாக இருந்தது.
இன்று யாரும் எதிர்பார்க்காமல் அமைந்தது..
இருவரும் நிலைகொள்ளாமல் தவித்தார்கள்.
சதீஷ் மௌனத்தை உடைத்தான்"சுஜா".அவன் கூப்பிட்டதும்தான் தாமதம்,அவள் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
"உனக்கும் என்னை பிடிக்காம போயிடுச்சுல்ல"அவன் குரல் தழுதழுத்தது.அவள் அழுகை அதிகமானது.அவன் அவள் அருகிலமர்ந்தான்."பார்க்கவே முடியாதுன்னு நினைச்சுட்டு இருந்தேன்.பாத்தியாவிதி எப்படி பாக்க வச்சது"..அவள் இன்னும் அழுது கொண்டிருந்தாள். சில நிமிடம் மௌனங்கள் பேசிக்கொண்டிருந்தது அவர்களிடையே.பின் அவள் நிமிர்ந்து அவனை தீர்க்கமாய் பார்த்தாள்.அவன் கையை இறுகப் பற்றினாள்.
என்னை மன்னிச்சிடு சதீஷ்..யாரோ பண்ணின தப்புக்கு உன்னை தண்டிச்சுட்டேன்.இனிமே நீயே என்னை வேணாம்னு சொன்னாலும் உன்னை விட்டு போக மாட்டேன்.இந்த ரெண்டு வருஷம் உன்ன பிரிஞ்சு இருந்த வலியை என்னால உனக்கு அவ்வளவு சீக்கிரம் புரிய வைக்க முடியாது"
"போகட்டும் சுஜா...இனிமே உன்னை வாழ்நாள் முழுதும் உன்ன பாத்துட்டே இருக்கப் போறேன் பாரேன்"என்றான்.அவள் சிரித்தாள்.
இருவருக்கும் வெள்ளம் போல் காதல் புரண்ட சமயத்தில்தான் அந்த ரயிலும் தன் தடம் புரண்டது...ஆம்..ரயில் விபத்துக்குள்ளானது...
சுஜாதா கண்களை இழந்தாள்.அவன் தன் உயிரை இழந்தான்.காதல் மட்டும் அங்கே த்டுமாறிக்கொண்டிருந்தது.
ஆறு மாதத்திற்கு பிறகு.....
நிலைக்கண்ணாடியில் சுஜாதா தன் முகத்தை பாத்துக்கொண்டிருந்தாள்.கண்களி
இன்று சுஜாதா சதீஷ் மூலமாக இந்த உலகத்தை பார்க்கிறாள்.சதீஷ் அவன் கண்கள் மூலமாக அவளை பார்க்கிறான்...
"போகட்டும் சுஜா..இனிமே உன்னை என் வாழ்நாள் முழுதும் உன்னை பாத்துகிட்டே இருப்பேன் பாரேன்"அவன் கூறியது மீண்டும் அவள் காதில் ஒலித்தது
name :satheesh
place :bangalore
0 அன்பு உள்ளங்கள்....:
Post a Comment