இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
டேம்ரூஸூம் அவனுடனான பயணங்களும்!!
தூறல்மெதுவாய் தூவிக்கொண்டிருந்தது.திருச்சிபேருந்து நிலையத்திலிருந்துபெங்களூர் செல்லும் சொகுசு பேருந்தில் அமர்ந்தேன்.மூன்று வருடங்கள் கழித்து பெங்களூர் செல்வது ஒரு வித எதிர்பார்ப்பு கொடுத்தது.தூறல் வலுத்தது.மழை
புது புது கோலங்களை போட முயன்று தோற்றுகொண்டிருந்தது.
எனக்கு மிகவும் பிடித்தது மாலைநேர பயணம்.இப்படியான ஒரு மழைநாளில் ஒரு பயண நேரத்தில்தான் டேம்ரூஸ் தன் காதலை சொன்னான்.டேம்ரூஸ்??
அவனின் அழகையும் திறமையையும் பார்த்து பார்த்து பிரமிதேன்.அவனை முதன் முதலில் சந்தித்ததும் பேருந்தில்தான்.தினமும் நான் செல்லும் சொகுசு பேருந்தில்தான் வருவான்.ஒரு நாள் என் தோழி கவிதாவிடம் பேசிகொண்டிருந்ததை பார்த்தேன்.அவளிடம் விசாரிக்கையில்,அவள் தோழியின் அண்ணண் என்றும் பக்கத்து அலுவலகத்தில் வேலை செய்வதாகவும் கூறினாள்.பின்னொருநாள் என்னை அவனிடம் அறிமுகமும் செய்து வைத்தாள்.
பெங்களூரில் நான் இருக்கும் இடத்திலிருந்துஎலக்ட்ரானிக் சிட்டி செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகும்.அவன் பழக்கம் ஆனவுடன் நேரங்கள் சுவராஸ்யமானது.பயண நேரம் போனதே தெரியாமலிருந்தது. அவன் ஆங்கிலோ இந்தியன் என்று தோற்றத்தில் தெரிந்தாலும் அழகாய் தமிழ் பேசுவான்.பிடித்த பாடல்கள்,கவிதை,நிறைய பேசுவோம்.கி.ரா வின் புத்தகங்கள் இருந்து ரிச் டாட் புத்தகம் வரை அனைத்தையும் அலசுவோம்.
எங்கள் தோழி கவிதாவின் பிறந்த நாளிற்கு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.நான் ஊதா நிற சேலை உடுத்திஇருந்தேன்.சின்னதாய் ரோஜா வைத்து இருந்தேன்.அன்று டேம்ரூஸ் என்னை புதிதாய் பார்த்தான்.நான் நன்றாக பாடுவேன் என்று எல்லாரும் பாட சொல்லிக் கேட்டார்கள்.
"எனக்கு பிடித்த பாடல்-அது
உனக்கு பிடிக்குமே"
என பாடி முடித்ததும் என் கண்கள் தன்னிசையாக அவனை பார்த்தது.எல்லாரும் நன்றாக பாடியதாக சொல்லி விட்டு சென்றார்கள்.அவனும் வந்து சொன்னான்.
"நல்லா பாடின"
"தேங்க்ஸ்"என்றேன்.
எப்பொழுதும் பேசும் எங்களுக்கு அன்று எதுவும் பேச தோன்றவில்லை.நான் கீழே குனிந்து சேலை தலைப்பை விரலால் சுத்திக்கொனிருந்தேன்.
"எனக்கும் அந்த பாட்டு பிடிக்கும்"என்றான்.நான் நிமிர்ந்தேன்.அவன் கண்கள் என்னை ஊடுருவியது.அவன் கண்களில் காதல் தேங்கி நின்றது.நான் கஷ்டப்பட்டு எச்சிலை விழுங்கினேன்.பின் அந்த இடத்தை விட்டு சென்றேன். அந்த மங்கிய சோடியம் விளக்கு வெளிச்சதிலும் அத்தனை பேர் மத்தியிலும் என்னை அடிக்கடி பாத்துக் கொண்டிருந்தான்.என் மனதும் இனிப்பாய் இருந்தது..
பின்னொரு நாள் எனக்கு பூனாவிற்கு மாற்றல் கிடைத்தது.இரு வாரங்களில் சேர அழைப்பு வந்திருந்தது.அன்று டேம்ரூஸீடம் கூறினேன்.மேலும் நாளை ஒரு நாள் மட்டும்தான் வரமுடியும்.மும்பைக்கு உறவினர் வீட்டு திருமணம் சென்று அப்படியே பூனா செல்வதாகவும்,அதற்காக நாளை மட்டும் வந்து செல்வதாகவும் கூறினேன்.சொன்னவுடன் அவன் முகம் சிறுத்தது.பின்னர் நிறுத்தம் வரும்வரை நாங்கள் எதுவும் பேச வில்லை.
அடுத்த நாள் வந்தது.டேம்ரூஸ்காக நான் பேருந்தில் காத்து இருந்தேன்.அவனும் வந்தான்..கையில் சிவப்பு ரோஜா வைத்து இருந்தான்.என் அருகில் அமர்ந்ததும் என்னிடம் கொடுத்தான்.நானும் அதை வாங்கி என்ன என்பது போல் பார்த்தேன்
"எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.உன் அழகு,உன் கண்கள்,உன் குணம்னு ஒவ்வொண்ணையும் ரசிச்சு இருக்கேன்.உங்கூட வாழ்நாள் முழுதும் இருக்கனும்.உன்னை ரசிக்கனும்,குறும்போட விளையாடனும்னு ஆசை..உனக்கும் என்னை பிடிக்கும்தானே?"என் மனதில் இருந்ததை பட படவென்று சொல்லி முடித்தான்.நான் ஒன்றும் சொல்லாமல் என் கையிலிருந்த ரோஜாவையே பாத்துக்கொண்டிருந்தேன். உதடுகள் துடித்தன.கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.எதுவும் சொல்லாமலே அமர்ந்து இருந்தேன். மாலையில் அனைவரிடமும் விடை பெற்றேன்.அவன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பான் என்று தெரிந்தும்,அவனிடம் எதுவும் சொல்லாமலே சற்று முன்னதாகவே சென்றேன்...
பின் மனது வலித்தது.ஏன் நான் அவனிடம் எதுவும் சொல்ல வில்லை.நானும்தானேஅவனை காதலித்தேன்..அவன் சொன்னது போல் ஏன் என்னால் சொல்ல இயலவில்லலை.அட ஆமாம் என்று சொல்லி இருக்கலாமே!மடத்தனம் செய்துவிட்டேனோ என்று நினைத்தேன். சரி அவன் அங்கேதான் இருக்கப் போகிறான்.எப்படியும் கவிதா மூலமாக சொல்லிவிடலாம் என்று சமாதானம் செய்து கொண்டேன்.பின் பூனாவிற்கும் சென்றேன்.ஒருநாள்..கவிதாவை தொடர்பு கொண்ட போது,அவன் மாற்றல் வாங்கி எங்கேயோ சென்றதாகக் கூறினாள்.அவளிடமும் அவன்சொல்லிகொண்டுபோகலையாம்.எனக்கு இடி விழுந்தது போலிருந்தது..அவ்வப்போது அவன் முகம் மனதில் தோன்றும்.என் நினைவுகளும் பாரமாகும்.அவன் கொடுத்த ரோஜாவை என் டைரியில் வைத்து இருந்தேன்.அந்த வாடிய ரோஜாவை பார்கையில் அவன் வாடிய முகம் ஞாபகத்திற்கு வரும்.அது என் மனதை வாட்டி எடுக்கும்.
இன்றும் என்னிடம் இருக்கிறது அந்த வாடிய ரோஜாவும் அதன் அச்சு பெற்ற டைரியும்.எனக்கும் அவனுக்கும் இருந்த உறவு புரியாமலே போய் விட்டது.
கண்களில் கண்ணீர் முட்டியது..அப்படியே உறங்கிப்போனேன்..விடிகாலை பெங்களூர் வந்தது..மார்கழி குளிரில் ஊர் முழுதும் உறங்கிக்கொண்டிருந்தது.என் மனது மட்டும் பாரம் ஏறிப்போயிருந்தது....
பெயர் :ஹேமிக்ருஷ்
இடம் :பெங்களூர்
2 அன்பு உள்ளங்கள்....:
டேம்ரூஸூம் அவனுடனான பயணங்களும்!!
நான் படித்த கதைகளில் இது ஒரு நல் முத்து... அறிமுக எழுத்தாளர் என்ற அடையாளத்துடன் மிக நளினமாக என்னை தன எழுத்தால் வசீகரித்த ஹெமிக்ரிஷ் உண்மையில் நல்ல எதிர்காலம் இருக்கிறது!!!
Nadai, varnanai.. alagu..
vaalthugal.. :)
Post a Comment