அன்புள்ளங்களே ... எதிர்பார்ப்பையும் மீறி நூற்றுக்கணக்கில் படைப்புகள்
குவிந்து விட்டன ..
பல நண்பர்களின் வேண்டுகோள்களை ஏற்று போட்டிக்கான இறுதிநாள் மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகின்றது என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட
சிறுகதைகளின் தொகுப்பு
"சின்னதாய் ஒரு சந்தோஷம்" - tamiluthayam01
"பேருந்தின் ஜன்னல் ஒரத்தில் "- அரவிந்த்03
"நான், அவள் மற்றும் அவன்"....காவிரிக்கரையோன்05
"புகையும் காதல்"....
"கொலுசும் - புல்லாங்குழலும்"09
காதல் பயணங்கள்...சுரபி11கூடு!...நான் ”ஆதவன்”12
டேம்ரூஸூம் அவனுடனான பயணங்களும்!!...ஹேமிக்ருஷ்14
சம்பவம்...முகிலன்15
நில்...கவனி...பயணி..சரவணன்16
என் சிலமணிநேர காதல்..தெய்வேந்திரன்17
பயணிகள் கவனத்திற்க்கு...ஊடகன்18
பேருந்து எண்:3c...சு.சேதுராமன்19
மதுவந்தினி @ நெல்லை எக்ஸ்பிரஸ்...ராம்குமார்21
2009 ...., மீண்டும் ஓர் மழை நாள்..,ஆனந்த் [ பேநா மூடி]25
உன் வாசம் மாறவில்லை...தக்ஷ்ணாமூர்த்தி 26
திவ்யா என் காதலியே...சே.தரணிகுமார்27
உனக்குள் நான்...எனக்குள் நீ...சதீஷ்28
புன்னகையுடன் ஓரு பயணம்..லாஜி30
வாழ்க்கையில் சில பயணங்கள்....... பயணங்களில் சில நிறுத்தங்கள்.......Arun Jeevan.S 31
பாதை மாறிய பயணம்...ஜெஸ்வந்தி..32
ஜில்லுனு ஒரு காதல்...Rufina Rajkumar...33
அன்புள்ளங்களே....
எதிர்பார்ப்பையும் மீறி... படைப்புகள் குவிவதற்கு மிக்க நன்றி..
இதில் நம்மை நெகிழவும்.. நெளியவும் வைக்கும் ஒரு கருத்து என்னவெனில்...
பதிவர்களை விட...பதிவரல்லாத புதியவர்கள் அனுப்பியிருக்கும் கதைகளே
ஏராளம் என்பதுதான்.
இது தமிழ் வலையுலகத்தில் பதிவர்களை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும்
பரிசுப் போட்டி...என்பதை அன்புடன் மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
பதிவர்கள் போட்டிக்கு அனுப்பிய கதைகளை தங்களது பதிவுகளில்
வெளியிடும்போது...தயவுசெய்து... இந்த வலைப்பதிவிற்கு இணைப்பு
கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்...
மிக்க நன்றி..
பதிவர்களின் கற்பனை வளம் மற்றும் எழுத்துத் திறமைக்கு உரமேற்ற ஒரு அரிய வாய்ப்பு.
சில குறிப்புகள் வழங்கப்படும்...
அதற்கு தொடர்புடைய...பொருத்தமான ஒரு குறுங்கதை அனுப்ப வேண்டும்.
நிபந்தனைகள்..
2. பதிவர்கள் மட்டுமே படைப்புகளை அனுப்பலாம்.
3. பாலியல், ஆபாசம், வன்முறை, தனிநபர் தாக்குதல், உள் குத்து போன்றவை கண்டிப்பாக அனுமதிக்க இயலாது.
4. ஒரு பதிவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை அனுப்பக் கூடாது.
5. மூன்று பேர் அடங்கிய தேர்வுக்குழுவினரால், தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு முதல் பரிசாக ரூபாய். 2,000/- (இந்திய ரூபாய் இரண்டாயிரம்) வழங்கப்படும். ****முக்கிய அறிவிப்பு... இது எங்களது வலைப்பதிவில் உறுப்பினராகஉள்ளவர்களுக்கு மட்டும்) (முடிவுகள் வெளியிடப்படும் நாள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்)
6. உறுப்பினர் அல்லாத பதிவர்களுக்கு, முதல் பரிசாக ரூபாய் 1,500/- (இந்திய ரூபாய் ஆயிரத்து ஐநூறு) வழங்கப்படும்.
7. பதிவர்கள் தங்களது படைப்புகளை கீழ்க்காணும் மின் அஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம்.
8. எழுத்துரு அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருப்பது மிக அவசியம். முடிந்தவரை எழுத்துப் பிழைகளைத் தவிர்ப்பது சாலச் சிறந்தது.
9. படைப்புகளை அனுப்பும்போது, தெளிவான தொடர்பு தகவல்களை (மின்னஞ்சல், தொலைபேசி/அலைபேசி, முகவரி) அளிக்கவும்.
10. தூய தமிழில் வரும் படைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
11. உங்களது அனைத்துப் படைப்புகளும், தர வரிசைப்படி தொடர்ந்து இந்த வலைத் தளத்தில் வெளியிடப்படும்.
12. பரிசு பெற்ற படைப்புகளின் படைப்பாளிகளுக்கு உரிய நேரத்தில் உரிய தகவல்கள் அனுப்பப்படும்.
13. பரிசுத் தொகை தாங்கள் தெரிவிக்கும் வங்கிக் கணக்கு எண்ணில் உடனடியாக அனுப்பப்படும்.
14. பதிவர்களுக்கு யு.ஏ.இ. எக்சேஞ்ச் மூலமாக பரிசுத்தொகை அனுப்பப்படும்.
15. முக்கியமாக அனுப்பப்படுபவை அவரவர் சொந்தப் படைப்பாக இருத்தல் அவசியம்.
16. மின்னஞ்சலில் எங்களுக்கு அனுப்பிய பின்னர், அவரவர் பதிவுகளிலும் வெளியிட்டுக் கொள்ளலாம்.
17. இறுதி நாள்: 25-01-2010
35 அன்பு உள்ளங்கள்....:
உண்மையிலே மனக்கதவை திறந்துவிட்டு உள்ளீர்கள் மாதவன் (சரிதானே பெயர்)
வருகையின் மூலம் தெரிவித்து உள்ளீர்கள் என்றால் என்னால் முடியும் என்று நம்புகிறேன்.
முயற்சிக்கின்றேன்.
நல்ல அறிவிப்பு.. நிச்சயம் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
.////****முக்கிய அறிவிப்பு... இது எங்களது வலைப்பதிவில் உறுப்பினராகஉள்ளவர்களுக்கு மட்டும்) (முடிவுகள் வெளியிடப்படும் நாள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்)
6. உறுப்பினர் அல்லாத பதிவர்களுக்கு, முதல் பரிசாக ரூபாய் 1,500/- (இந்திய ரூபாய் ஆயிரத்து ஐநூறு) வழங்கப்படும். ///
இதன் அர்த்தம் விளங்கவில்லை. புரியப்படுத்தவும்.
நன்றி.
--விதூஷ்
"என்ன... பரிசுத் தொகை இரண்டையிரமா....? சொக்கா, இந்த நேரம் பார்த்து கற்பனை வர மாட்டேங்குது.....என்ன பண்ணுவேன்,..... "
"புலவரே!,,,,,, அழைத்தது யாம்தான்,.....டிசம்பர் வரை நேரம் இருக்கு, முயற்சி செய்...."
செய்கிறேன்.
வலை உறுப்பினர்கள் என்றால் followers என்று நினைக்கிறேன். அப்படித்தானே?
அதேதான் நண்பரே..
நல்லதொரு வாய்ப்பு முயற்ச்சிக்கலாமே.
இதோ இப்பவே யோசிக்கிறேன்..
http://niroodai.blogspot.com
//
போட்டி எண். ஒன்றிற்கான குறிப்புகள்.
ஒரு இளைஞன்..ஒரு இளம் பெண்...ஒரு சிறு ரயில்/பஸ் பயணம்...காதல் //
இது என்ன? இந்த சூழ்நிலைக்கேற்ற கதை மட்டுமே அனுப்ப வேண்டுமா? விளக்கம் தேவை நண்பரே.
ஆம் நண்பரே...இந்த சூழ்நிலைக்கேற்றவாறு கதை இருக்க வேண்டும்..
நல்ல வாய்ப்பு..அனுப்புகிறேன்....
அட! நானும் கலந்துக்கப் போறேன்!
அட ...
கதை எழுதி மின்னஞ்சலில் அனுப்பிவிட்டேன், என்னுடைய வலைப்பூவில் பதிவும் இட்டுவிட்டேன். http://ulagamahauthamar.blogspot.com/2009/11/blog-post_25.html
போட்டியில் சேர்த்துக் கொள்ள வேண்டுகிறேன்.
நன்றி.
அவசிய பின்குறிப்பு: இது என் சொந்தக் கதை என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக மிக அவசிய பின்குறிப்பு: சொந்தக் கதை என்றால் சொந்தமான கற்பனைக் கதை - சொந்த அனுபவக் கதை என்று நினைக்க வேண்டாம்.)
கதை அனுப்பியுள்ளேன். எனது பதிவிலும் வெளியிட்டு விட்டேன் நண்பரே..
வாய்ப்புக்கு நன்றி..............
விரைவில் ஒரு நல்ல கதையோடு வருகிறேன்...........
நானும் கண்டிப்பாக கலந்து கொள்ள முயற்சிக்கின்றேன்.... போட்டி நடத்துவதற்கு நன்றி...
என் கதையை உங்களுக்கு அனுப்பி விட்டேன். கீழ்கண்ட முகவரியில் என் வலைதளத்திலும் பிரசுரித்து விட்டேன்.....
http://mjvs.blogspot.com/2009/11/blog-post_27.html
போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த நிகழ்வை நடத்தும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.,
வாழ்த்துக்கள்.. உங்கள் முயற்சி வெற்றியடையட்டும்,....
தகவலுக்கு நன்றி...
ஏற்கனவே எழுதிய கதையை அனுப்பலாமா பாஸ்..!
நண்பர் ராட் மாதவுக்கு,
வணக்கம்.
சிறுகதை போட்டி அறிவித்தமைக்கு நன்றி.
கதையை தங்களுக்கு அனுப்பியாச்சு...
இன்று எனது 'சிறுகதைகள்' வலைத்தளத்தில் பதிவு செய்ய உள்ளேன். போட்டியில் கலந்து கொள்ளும் கதைகள் எப்போது நண்பா பிரசுரமாகும். (எல்லாக் கதைகளையும் படிக்கணுமில்ல...)
நன்றி
நானும் எழுதலாமா?
எனக்கு வரும்னு நினைக்கிறிங்க!?
கலந்துக்கிறேன் கலந்துக்கிறேன்..
என் கதையை அனுப்பினேன்.இதற்கு விதிமுறைகள் எதாவது உள்ளதா என தயவு செய்து கூறவும்.நன்றி.
மாதவ்,
என் படைப்பு - சம்பவம் - அனுப்பி வைத்துவிட்டேன். என் வலைப்பூவிலும் போட்டு விட்டேன்.
http://pithatralkal.blogspot.com/2009/12/blog-post_17.html
எனக்கு கதைகள் எழுதுவது புதிது.. நெறைய பேரின் திறமைகள் ஆச்சர்யமாய் இருந்தது.. அனைவருக்கும் வாழ்த்துகள்..
படைக்கவும், வாசிக்கவும் வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள்...
நண்பர் ராட் மாதவுக்கு,
வணக்கம்.
"பயணிகள் கவனத்திற்கு" என்ற பதிவை பரிசுப் போட்டிக்காக அனுப்பியுள்ளேன்.... இதை பரிந்துரை செய்து பரிசுப் போட்டியில் என்னையும் இணைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
எனது பதிவிலும் வெளியிட்டு விட்டேன் நண்பரே..
http://oodagan.blogspot.com/2009/12/blog-post_19.html
நன்றி,
ஊடகன்
உங்கள் நிபந்தனைகளின் படி செம்மொழிப் பைந்தமிழ் மன்றம் வழங்கும் பரிசுப் போட்டிக்கான எனது சிறுகதை திருப்பரங்குன்றம் டு திருப்பாலை வழி பெரியார்
தங்கள் போட்டிக்கு ஒரு கதையை இப்போது அனுப்பினேன்... தங்களுக்கு வந்ததா உறுதி செய்யவும்...
எனது சிறுகதை கீழுள்ள தளத்தில் பதிந்துள்ளேன்..வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள்..
http://laajee.blogspot.com/2009/12/blog-post.html
என்னங்க போட்டி இறுதிநாள் தள்ளி வச்சுட்டீங்களா? முதல்ல 31/12/2009 இருந்த மாதிரி ஞாபகம், இப்போ 25/1/10 ஆ...? நாளைக்கு எழுதலாம்னு நினைச்சேன்.. நன்றிகள்
என்னுடைய சிறுகதையை தங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவிட்டேன். எனது தளத்திலும் பதிவிட்டிருக்கிறேன். http://vennilapakkangal.blogspot.com/2010/01/blog-post.html
வாய்ப்புக்கு நன்றி !
என் சிறுகதையை அனுப்பியுள்ளேன் வந்ததா?
பதில்தரவும் பின்பு என் தளத்திள் வெளியிடுகிறேன்.
அன்புடன் மலிக்கா
முடிவுகள் எப்போது?
மாதவ்,
முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?
- கிரகம்
Post a Comment