இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ் திரைப் பாடல்களின் தரம் பற்றி விவாதிக்கலாமா??காரணம், அண்மையில் நானும் எனது நண்பரும் ஒரு குறு விவாதத்தில்
ஈடுபட்டோம். நண்பர் மலையாளப் பாடல்களின் தரம் பற்றி என்னிடம் விளக்கமாகக்
கூறிக்கொண்டிருந்தார்....
அது உண்மைதான்..... இருந்தாலும் தமிழ் பாடல்களும் தரம் மிக்கவைதான் என்று
நான் வாதித்துக் கொண்டிருந்தேன்....
திடீரென்று சிறு சிறு பிட்டு பிட்டாக காகிதங்களை என் கையில்
கொடுத்தார்...
(கேமரா அப்படியே பின்னோக்கி லாங் ஷாட்டில் போகின்றது.... அதாங்க....
பிளாஷ் 'பேக்கு'....)
நண்பர் கேரளாவில் ஒரு பெண்கள் கல்லூரியில் விரிவுரையாரளராக வேலை
பார்ப்பவர்....
வேலியில் போகும் பாம்பை எடுத்து தோளில் போட்ட கதையாக.... செவனே என்று
இருந்தவர்..... தமிழ் பற்று காரணமாக.... இலவசமாக தமிழ் கற்றுத்
தருகின்றேன் என்ற பெயரில் கல்லூரிப் பெண்களுக்கு 'இலவச டியூசன்' எடுக்க
ஆரம்பித்தார்....
ஒரு வாரத்தில் அதை விட வேகத்தில் 'கடையை' மூடி விட்டார்????
காரணம்... நண்பர் இருக்கும் இடம் 'பாலக்காடு'....
தமிழ், மலையாளம் இரண்டும் தெரிந்த சில பல மாணவிகள் கேட்டதமிழ் திரைப் பாடல் விளக்கங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திக்கித் திணறி' கடையை மூடி விட்டார் ..
நண்பர் என்னிடம் கேட்ட சில பாடல்களுக்கே என்னால் விளக்கம் சொல்ல முடியவில்லை.....
முடிந்தால் நீங்கள் சொல்லுங்களேன்....
இந்தப் பாடலுக்கு முதலில் விளக்கம் சொல்லுங்கள்.....
படம் :
குரு சிஷ்யன்
பாடியவர்கள்: எஸ் பி பி. சித்ரா
பாடல்: வாலி
இசை: இளைய ராஜா
பிரபு பாடுவது....
" ஈரெட்டு வயதில் ஈரத் தாமரை
வாய் விட்டு சிரிக்காதா.....
வாய் விட்டு சிரிக்கும் மாலை நேரத்தில்
தேன் சொட்டு தெறிக்காதா
தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு
தாகத்தை தணித்திட வா.......
சீதா பாடுவது...
ஆனாலும் நீ காட்டும் வேகம் ஆத்தாடி தாங்காதம்மா... பொன்வண்டு கூத்தாடும் பொது பூச்செண்டு நோகாதம்மா... போதும்..... போதும்..... நீ வா.....
அழகர் மலை
"கருகுமணி கருகுமணி கழுத்துல ஆடுதடி கனிஞ்ச கனி உரிமை இனி எனக்கென்னு பாடுதடி கொடுத்துவச்ச ஆள் நானு அது உனக்குத் தெரியாது வயதில் வரும் கோளாறு வந்திருச்சி தகராரு இது யாருக்கான திருநாளு திருநாளு!"
சிங்கார வேலன்:
"அரீ ஓ ரங்கா ஸ்ரீலங்கா கொப்பரை தேங்கா இப்போ பாருங்கா நார்த்தங்க முத்தின மாங்கா துள்ளிப் பாயாதே வெட்கங்கெட்டு ராங்கா நான் தாரேன்டி இப்போ டபுள் ஸ்ட்ராங்கா"
தங்க மகன் திரைப்படத்தில் இருந்து.....
மாங்கனிகள் தொட்டிலில் தூங்குதடி அங்கே.. மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே.. நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்
புதுமைப்பெண்
பொத்திவைத்த மல்லிகைமொட்டு, பூத்திரிச்சு வெட்க்கத்தைவிட்டு....?????????
''சீவலப்பேரி பாண்டி"
ஆ: ''ஏய்.. மசாலா அரைக்கிற மைனா- ஓம் மத்தளம் என்ன விலை மாராப்பு வழுக்கிற மயிலே- ஓம் மல்லியப்பூ என்ன விலை நீ பொறந்த தேதியில் அடியே எனக்குப் புத்தி மாறிப்போச்சு! நீ சமைஞ்ச தேதியில் அடியே எனக்கு பாதித் தூக்கம் தொலஞ்சி போச்சு! ஆமா தூக்கம் தொலஞ்சி போச்சு!"
''கிழக்குச் சீமையிலே" என்ற படத்தில்,
ஆ: ''எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வைப்பாட்டி எக்கச்சக்கம் ஆகிப்போச்சு கணக்கு பள்ளிக்கூடம் போகையிலே பள்ளப்பட்டி ஓடையிலே கோக்குமாக்கு ஆகிப்போச்சி எனக்கு இத குத்துமுன்னு சொன்னா அவன் கிறுக்கு"
ஜெய்ஹிந்த்"
''பார்வைக்கு ஏத்த இடம் பாவையே எந்த இடம்? பெண்: எந்த இடம் சூரியன் பார்க்கலையோ அன்பரே அந்த இடம்"
கேப்டன்
'இடுப்பு அடிக்கடி துடிக்குது றவுக்க எதுக்கடி வெடிக்குது"
பிரதாப்
'மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா மார்க்கெட்டு போகாத
குண்டு மாங்கா"
மனசு ரெண்டும் புதுசு
''பாவாடை காற்றில் பறந்தால் நீ என்ன செய்வாய்? பல பேரின் கண்கள் முறைக்கும் வேறேன்ன செய்வாய்? பாவாடை காற்றில் பறந்தால் பல பேரின் கண்கள் விழுந்தால் பாவாடை கொண்டு முகத்தை மூடுவேன்"
சாமுண்டி
பெண்: ''கதவச் சாத்து கதவச் சாத்து மாமா நான் கன்னி கழிய வேணுமையா ஆமா கன்னி நான் கழிஞ்சிதான் தாலிய நீ கட்ட வேணும்"
இந்து.....
'எப்படி எப்படி சமஞ்சது எப்படி.. சக்கரவள்ளிக் கிழங்கே நீதான் சமஞ்சது எப்படி..'
பார்த்திபன் கனவு......
சைட் அடிப்போம் தம்மடிப்போம் தண்ணியதான் கலந்தடிப்போம் புக்ஸ் மட்டும் எடுக்கவே மாட்டோம்
பகவதி....
'உனக்குப் பிடிச்சா அள்ளு அள்ளு ஊரு கெடக்கு தள்ளு தள்ளு' 'ஆடுகிற வயசில் ஆடித்தான் பார்க்கோனும் அள்ளு அட்வைஸ் பண்ணி எவனாச்சும் வந்தான்னா தள்ளு'
ஜெமினி
'மோகம் என்று வந்து விட்டால் முகவரியே தேவையில்லை'
தமிழன்
'லைசென்ஸ் இல்லாத யாரைப் பார்த்தாலும்
லவர் இவளென்று தோணுது'
தமிழன்
'மண்ணில் உள்ள பொருள் என்னவென்று
செயற்கைக் கோள்கள் தேடும்
ஒரு பெண்ணில் உள்ள பொருள் என்னவென்று
என் கண்கள் தேடும்'
ஏப்ரல் மாதத்தில்
'பொண்ணுங்க முகங்களை பார்க்கவே மாட்டோம்
ஆனா முகம் தவிர மத்தத பார்ப்போம்'
சமுத்திரம்
'தாராளமா மனசிருந்தா கேரளான்று தெரிஞ்சுக்கோ..
ஜெமினி
'ஏராளமாய் மார்பிருக்கு தாராளமாய் மனசிருக்கு'
சாமி
'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா.. ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கிலாமா..
தாலியத்தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா.. இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா.'
'கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு, குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு..
'நாயுடுஹாலா மாறிவிட நாங்க ரெடி எங்கள மார்போடு சேர்த்துக் கொள்ள நீங்க ரெடியா'
*****************************
இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.....
எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் தீராது.....
இவ்வளவு தரம் வாய்ந்த நம் தமிழ் திரைப் பாடல்களூக்கு இன்னமும் ஏன் ஆஸ்கார்அவார்டு கிடைக்கவில்லைஎன்பது எட்டாவது உலக அதிசயமே.......
21 அன்பு உள்ளங்கள்....:
//இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.....
எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் தீராது.....//
இத விட இன்னும் தரம் வாய்ந்த பாடல்கள் இருக்கேப்பா.... :)
//காரணம், அண்மையில் நானும் எனது நண்பரும் ஒரு குறு விவாதத்தில்
ஈடுபட்டோம்.//
நல்ல வேளை.... குறு.... தப்பித்தோம்.
'பெரும்' சந்திப்பு என்றால்... உண்மைத்தமிழன் பதிவு மாதிரி
எ ..வ் ....வ...ள...வு.... பெருசா இருந்திருக்கும்... :-))))
//நண்பர் மலையாளப் பாடல்களின் தரம் பற்றி என்னிடம் விளக்கமாகக்
கூறிக்கொண்டிருந்தார்....//
நண்பரிடம் இந்தப் பாட்டுக்கு விளக்கம் கேட்கவும்.
என்டெ எல்லாம் எல்லாம் அல்லெ....
என்டெ சேலத்து செம்பருந்தல்லெ...
நின்டெ மாரிலெ மாயாச் சந்தனப் பொட்டெனிக்கல்லெ.....எனிக்கல்லெ....
//நண்பரிடம் இந்தப் பாட்டுக்கு விளக்கம் கேட்கவும்.//
தங்க பஸ்ப குறியுள்ள
தம்புராட்டி
நின்டெ
வெள்ளீயாழ்ச்ச
நோம்பின்னு
முடக்கும் ஞான்....
//திடீரென்று சிறு சிறு பிட்டு பிட்டாக காகிதங்களை என் கையில்
கொடுத்தார்...//
இங்கேயும் பிட்டு தானா???
//சமுத்திரம்
'தாராளமா மனசிருந்தா கேரளான்று தெரிஞ்சுக்கோ..//
இது ரன் படமாச்சே மாதவ் :)
ஹாஹாஹா!
பழைய பாடல்கல் நிறைய இருக்கு தல!
தமிழ் பாடல் வரிகள் எல்லாமே கேலிக்கூத்து ஆகிவிட்டது... யார் வேண்டுமானாலும் தமிழ் திரைப்படப் பாடல்கள் எழுதலாம்.... உதாரணம் இங்கே ---> http://creativetty.blogspot.com/2008/05/how-to-write-lyrics-for-tamil-film.html
நல்ல ஆராய்ச்சி! கீ இட் அப்!!
இப்படியே போனா...
என்னாச்சி ...
ஆராய்ச்சி பலமாத்தான் இருக்கு
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :-)
நீங்களும் பாவம் உங்க நண்பரும் ரொம்ப பாவம் :-)
//காரணம், அண்மையில் நானும் எனது நண்பரும் ஒரு குறு விவாதத்தில்
ஈடுபட்டோம்.//
நல்ல வேளை.... குறு.... தப்பித்தோம்.
'பெரும்' சந்திப்பு என்றால்... உண்மைத்தமிழன் பதிவு மாதிரி
எ ..வ் ....வ...ள...வு.... பெருசா இருந்திருக்கும்... :-))))//
பெரியவரே, வர வர உங்க கொசுக்கடி தாங்க முடியலேங்க......
உண்மைத்தமிழன் கோவிச்சுக்கப்போறாரு..... பாத்துக்கோங்க.... :-)))))
//சமுத்திரம்
'தாராளமா மனசிருந்தா கேரளான்று தெரிஞ்சுக்கோ..//
இது ரன் படமாச்சே மாதவ் :)//
நன்றி.... ஆதவன்...
யானைக்கும் அடி சறுக்கும்....இல்லியா... அப்புறம் இந்த சாதாரண பி. பதிவருக்கு சறுக்காதா... என்ன???....
(அப்பாடா... சந்தடி சாக்குல... நமக்கு ஒரு 'ஓ' போட்டாச்சு...:-)
தமிழ் பாடல் வரிகள் எல்லாமே கேலிக்கூத்து ஆகிவிட்டது... யார் வேண்டுமானாலும் தமிழ் திரைப்படப் பாடல்கள் எழுதலாம்.... உதாரணம் இங்கே ---> http://creativetty.blogspot.com/2008/05/how-to-write-lyrics-for-tamil-film.html//
நன்றி. கார்த்திக்.
தங்களது பதிவை பார்த்தேன்........ அருமை... சேம் பிளட்... :-)
ஹாஹாஹா!
பழைய பாடல்கல் நிறைய இருக்கு தல!//
நன்றி வால் பய்யன்....
நீங்களும் கொஞ்சம் எடுத்து விடுங்களேன்.... :-)
நல்ல ஆராய்ச்சி! கீ இட் அப்!!
இப்படியே போனா...//
நன்றி கலை.
நீங்க சொல்ல வருவது... 'கீழ்ப்பாக்கமா'.... இல்லை 'ஊழம்பாறயா....
ஹி ஹி ஹி..... :-)
என்னாச்சி ...//
:-)))
நீங்களும் பாவம் உங்க நண்பரும் ரொம்ப பாவம் :-)//
ரம்யா....அக்கா...... நீங்கள் இவ்வளவு நல்லவுங்களா ?????? :-))
மாதவ்,இதெல்லாம் தெரிவுப் பாடல்களா?இவைக்கு விளக்கம் வேற.பாவம் நீங்க.
உங்கள் தகவல் அனைத்தும் அருமை , உங்கள் blog ஐ bookbark செய்துள்ளேன்
நன்றி
Post a Comment