Sunday, November 15, 2009

எனக்கு வந்த வாசகர் கடிதம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


வாசகர் கடிதம்...

அன்பின் ராட் மாதவ்...

தங்களது படைப்புகளைத் தவறாமல் அடம் பிடித்து படித்தவன்.... படிப்பவன் நான்...

பித்துப் பிடித்து முற்றி... பைத்தியமாகத் திரிந்த என் நண்பன் ஒருவன் உங்களது படைப்புகளைப் படித்து இப்போது தெளிவடைந்து விட்டான்.. இதுவரை வீட்டில் வசித்து வந்தவன், இப்போது நிரந்தரமாக......கீழ்ப்பாக்கத்தில் குடியேறி விட்டான்....

உங்களது எழுத்து வடிவம் தமிழ் பின்...முன்..நவீனத்துவ உலகில் செய்து வரும் மாற்றங்களை என் வாயால் வர்ணிக்க முடியாது... என்பது விஸ்கியில் குதித்து பொங்கி நுரை ததும்பும் சோடா போல் மறுக்க முடியாத உண்மை...

எழுத வந்த சில மாதங்களிலேயே.... பிரபல பதிவர் என்ற பட்டம் உங்களைத் தேடி.. நாடி வந்து...இன்று உங்களிடமே அடைக்கலமாகி விட்டது....இது விந்தையிலும் விந்தை... வியப்பிலும் வியப்பு....


எப்படி உங்களால் மட்டும் சாதிக்க முடிகின்றது...

உங்களது எழுத்துக்களைப் படிக்கும்போது...

அதை எப்படிச் சொல்வது.....

ஒரு குவார்ட்டரை.... அப்படியே... ராவாக... உள்ளூக்குள் இழுக்கும் ஒரு சுகம்....ஆஹா....

இனி விசயத்திற்கு வருகின்றேன்...

இந்த உலகை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை....

இவ்வளவு திறம் மிக்க உங்களை இந்த உலகம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளாமல்... ஏன் இப்படி ஏசுகின்றது...

உங்களைப் பற்றி மிக மோசமான முறையில் ஏளனம் செய்கின்றது....

நீங்கள் என்னதான் பயனுள்ள படைப்புகள் அளித்தாலும், 'மொக்கை' என்று கேலி செய்கின்றனர்....

இமயம் முதல் குமரி வரை உங்கள் கால் படாத இடமில்லை..... வாழ்க்கையில் நீங்கள் காணாத எதுவும் உண்டா....

முடிந்தால் நீங்கள் எனக்கு உங்களைத் தூற்றுவோர் பற்றிய ஒரு லிஸ்ட் கொடுங்கள்.

முனியாண்டி விலாஸ் கூட்டிச் சென்று... மூக்கு முட்ட ஒரு குவார்ட்டரும், கோழி பிரியாணியும்.... வாங்கிக் கொடுத்து,

கூட்டமில்லாத இடத்திற்கு கூட்டிச் சென்று... முகத்தில் இஞ்ச் கேப்பில் ஒரு பஞ்ச் அடித்து விடுகின்றேன்...


இப்படிக்கு

தங்கள் வாழ்நாள் வாசகன்

மண்ணுக்குள் மைந்தன்...

**************************

இதற்கு என்ன பதில் எழுதலாம்...உங்களின் மேலான ஆலோசனைகள்
வரவேற்கப்படுகின்றது....

9 அன்பு உள்ளங்கள்....:

VASAVAN said...

அடப்பாவிகளா... நீ இன்னமும் திருந்தவேயில்லையா???? :-))) :-(((

VASAVAN said...

//விஸ்கியில் குதித்து பொங்கி நுரை ததும்பும் சோடா //

//ஒரு குவார்ட்டரை.... அப்படியே... ராவாக... உள்ளூக்குள் இழுக்கும் ஒரு சுகம்.//

இதுக்கும் மேல நீ குடிகாரன் இல்லன்னு சொன்னா இந்த வூரு உலகம் நம்பவா போகுது..!!!!!

iTS mE & mYSELF said...

//தங்களது படைப்புகளைத் தவறாமல் அடம் பிடித்து படித்தவன்.... படிப்பவன் நான்...//

உங்களை நினைத்தால் பாவம்+பரிதாபமாக இருக்கின்றது தல.... :‍)LOL

ஜீவன்பென்னி said...

எந்த ஊரு முனியாண்டி விலாஸ்னு கேட்டு சொல்லுங்க

Karthick Krishna CS said...

அவர் சிந்தனையெல்லாம் அப்படியே என்னைப் போலவே இருக்கின்றன.. க க க போ....

D.R.Ashok said...

:)))))))))))))

பா.ராஜாராம் said...

:-)))

Anonymous said...

\\"தங்களது படைப்புகளைத் தவறாமல் அடம் பிடித்து படித்தவன்.... படிப்பவன் நான்..."//

அய்யோ பாவ‌ம்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//தங்களது படைப்புகளைத் தவறாமல் அடம் பிடித்து படித்தவன்.... படிப்பவன் நான்...//

"இந்த ஒரு காரணத்தினாலேயே, இந்த கடிதத்தின் நம்பகத் தன்மை குறைந்து விடுகிறது" என்று பதில் அனுப்பி விடுங்கள்.

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!
'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog