Sunday, November 15, 2009

நொந்து+நூலாகி+சருகாகி+உதிரும் வாழ்க்கைக் கனவுகள்......

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அண்மையில் என்னுடன் ஒன்றாகப் படித்த சில பல பழைய நண்பர்களை காண நேர்ந்தது.

ஒரு புறம் சந்தோசம். மறு புறம் மெல்லிய கீறல் போல் மனதில் சிறு துக்கம்.

ஒரு வினோதம் புரியவில்லை.

பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற யாராவது பன்னிரண்டாம் வகுப்பில் அதே போல் தேறியுள்ளதாக சரித்திரம் இருக்கிறதா?

அவர்களே மீண்டும் கல்லூரி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற சரித்திரம் உண்டா????

சந்தர்ப்பம் மற்றும் குடும்ப சூழல் காரணம் பலரது வாழ்க்கையும் எதிர்பார்ப்புகளை, கனவுகளை ஓரம் கட்டி ஒதுக்கி விடுகின்றது.

நான் சந்தித்த சில நண்பர்களின் இந்நாள் நிலைமையை நேரில் கண்டபோது.......

* இன்ச் கேப்பில் பஞ்சடித்து விடும் திறமை கொண்ட ஒரு நண்பன். அபாரமாக கவிதை எழுதுவான். இப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறான்

* பத்தாயிரம் பேர் சேர்ந்து பம்பு அடித்தாலும் பொங்கும் எரிமலை நான் என்று வசனம் பேசியவன் இப்போது கலெக்டர் அலுவலகத்தில் பியூன் ஆக இருக்கிறான்.

* மனிதனுக்கு எலெக்ட்ரிக் ஷாக் அடித்தால் ரத்தம் எங்கே போகும் என்ற வாத்தியாரின் கேள்விக்கு 'ரத்தம் முழுவதும் மெயின் மீட்டர் பாக்ஸில் இருக்கும்' என்று சொல்லி அடி வாங்கியவன் இப்போது பிரபல வக்கீல் ஆக இருக்கிறான்.

* பத்தாம் வகுப்பில் நான் வகுப்பில் முதல் மாணவன், ஆனால் பள்ளியிலேயே முதல் மற்றும் மாவட்ட அளவில் நான்காவதாக வந்தவன், இப்போது வெஜிடேரியன் ஹோட்டல் நடத்திக்கொண்டிருக்கிறான்.

* தமிழ், ஆங்கிலம், ஒழுங்காக எழுதப்படிக்கத் தெரியாமல் இருந்தவன், இப்போது மீட்டர் வட்டி நிறுவனம் நடத்தி பணக்காரனாக இருக்கிறான்.

* ஆறாம் வகுப்பு படிக்கும் போதே 'நானும் என் அப்பாவும் விமானத்தில் போகும்போது, என்ஜின் ரிப்பேர் ஆகிவிட, என் அப்பா என்னை துண்டால் முதுகில் கட்டிக்கொண்டு பக்கத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஒரே தாவாக தாவி விட்டார்' என்று ரீல் விட்டவன் இன்று மலேசியாவில் மென்பொருள் துறையில் இருக்கிறான்.

* ஆனால் வித்தியாசமாக, மிகவும் சராசரி மதிப்பெண்கள் பெற்று தேறிய சில நண்பர்கள் நிதானமாக கல்லூரிப்படிப்பை தொடர்ந்து, அதிலும் சராசரி மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் நல்ல பொறுப்பில் இருக்கிறார்கள்.

* ஏழாம் வகுப்பில் டீச்சருக்கே லவ் லெட்டர் கொடுத்து டிசி வாங்கிப்போனவன் இன்று அரசியலில் புகுந்து 'மாவட்ட இளைஞர் அணி செயலாளன்.

இதில் என்னுடன் போட்டி போட்டு படித்து எனக்கு பெரும் சவாலாக இருந்தவன் இப்போது டாக்டர் ஆகி விட்டான்.

இன்னும் நிறைய பேர் இருக்கின்றார்கள். எழுத மனம் வரவில்லை.....

******************

ஆமாண்டா. இவ்வளவு தெளிவா பேசுறியே... நீ என்னத்த கிழிச்சே.....
(நீங்கள் கேட்பது காதுல கேட்காம இல்லங்க....)

******************

என்னை ஒரு டாக்டர் ஆக்க வேண்டும் என்று என் பெற்றோருக்கு மோகம் இருந்தது. நானும் படித்தேன். ஆனால் இன்று டாக்டர் ஆகவில்லை.....
என்றாலும் அந்த அளவுக்கு ஒரு ராங்கில் இங்கு குப்பை கொட்டி கொண்டிருக்கிறேன்.

***** அதுக்கும் மேல இப்ப ஒரு ' பிரபல பதிவரா ' இருக்கேன். இதுக்கு மேல என்ன வேணுமுங்கோய்....
குறிச்சொற்கள்:
நண்பர்கள்
வாழ்க்கை
வினோதம்
வியப்பு
ஆச்சர்யம்
அபிமானம்
நட்பு
மெல்லிய துயரம்
சந்தோசம்
பிரபல பதிவர்

31 அன்பு உள்ளங்கள்....:

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா


சரி பிரபல பதிவரே!

நட்புடன் ஜமால் said...

என்னை நடிகனாக பார்த்தார்கள் எனது பள்ளியில்

நானும் நடிகனாகவிட்டேன்

நல்லவன் போல - ப்லாக் உலகத்தில்

ஹூ ஹா ஹா ...

VASAVAN said...

//பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற யாராவது பன்னிரண்டாம் வகுப்பில் அதே போல் தேறியுள்ளதாக சரித்திரம் இருக்கிறதா?

அவர்களே மீண்டும் கல்லூரி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற சரித்திரம் உண்டா????

சந்தர்ப்பம் மற்றும் குடும்ப சூழல் காரணம் பலரது வாழ்க்கையும் எதிர்பார்ப்புகளை, கனவுகளை ஓரம் கட்டி ஒதுக்கி விடுகின்றது.//

வினோதம் புரியவில்லை

VASAVAN said...

பரவாயில்லப்பா. என்னடா உருப்படியா பதிவு poduriyennu பார்த்தேன்.
ஆனா climaxla வழக்கம்போலவே mokkai தானா? :-)

RAMYA said...

எல்லாருடைய நிலையையும் படிச்சேன்.

ஒவ்வொருவருடைய அனுபவமும் படித்து இதுதான் நிதர்சனம் என்று புரிந்து கொண்டேன்.

ஆனா நீங்க டாக்டர் இல்லையா??

ஒரு flight இருந்து இன்னொரு flight தாவினாரா?

அது எப்பூடின்னு கேளுங்க நம்பளும் ட்ரை பண்ணலாம் :))

ச.செந்தில்வேலன் said...

அசத்தீட்டீங்கோவ்வ்வ்....

பார்க்கற வேலைக்கும் படித்த படிப்பிற்கும் ஓரளவே தொடர்புள்ளது. படித்த படிப்பு முதல் படிக்கு மட்டுமே உதவும். மற்ற படிகள் எல்லாம் அவரவர் புத்தி, திறமை, நேரம், சொம்பு, ஜால்ரா, பணம் முதலியன மூலம் தீர்மானிக்கப்படுகிறது :))

ஜெஸிலா said...

//பிரபல பதிவர்// இதுக்குதான் இவ்வளவு அலம்பலா :-)

VASAVAN said...

//இன்ச் கேப்பில் பஞ்சடித்து விடும்//
//பத்தாயிரம் பேர் சேர்ந்து பம்பு அடித்தாலும் பொங்கும் எரிமலை//

paaththuppaa.... vadivelu auto la vanthu erangapporaaru.

VASAVAN said...

//பத்தாம் வகுப்பில் நான் வகுப்பில் முதல் மாணவன்//

உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலயாப்பா ????? :-)

தமிழ்நெஞ்சம் said...

***** அதுக்கும் மேல இப்ப ஒரு ' பிரபல பதிவரா ' இருக்கேன். இதுக்கு மேல என்னங்க வேணுமுங்கோய்....

C l a s s i c

Karthick Krishna CS said...

இது போல என்னைப் பற்றி என் நண்பனோ, அவனைப் பற்றி நானோ எழுதும்போது, இருவருமே நல்ல நிலைமையில் இருப்போம் என நினைக்கிறேன்.... நீங்க என்ன பண்றீங்கன்னு கடைசி வரை ஒழுங்கா சொல்லலியே.. இல்ல நீங்க ஒழுங்கா எதுவும் செய்யறதில்லையா???

கலையரசன் said...

//என்னைய ஒரு டாக்டர் ஆக்க வேண்டும் என்று என் பெற்றோருக்கு மோகம் இருந்தது.//

அட்லீஸ்ட் கம்பவுடர்ராவது ஆகுனிங்களா பாஸ்?
எல்லாரும் டாக்டர் ஆனா.. யாருதான்டா பேஷண்ட்டு...?
:-)))))))))))

கரவைக்குரல் said...

அப்ப உங்கள் பெற்றோர் ஒரு பிரபல பதிவராக்க நினத்திருந்தால் இப்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்ன?
ஹிஹிஹிஹி

படித்தது எல்லாம் எப்போதும் எம்முடன் கூடி வரும்
என்றும் அது உதவியே
அது தொழிலுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பயனுடையதே

கோபிநாத் said...

நானும் கொசுவத்தி சுத்திக்கிட்டு இருக்கேன் இப்போ ;))

RAD MADHAV said...

// நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா


சரி பிரபல பதிவரே!//


ஹ ஹ ஹா நீங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள் -;)

// நட்புடன் ஜமால் said...

என்னை நடிகனாக பார்த்தார்கள் எனது பள்ளியில்

நானும் நடிகனாகவிட்டேன்

நல்லவன் போல - ப்லாக் உலகத்தில்

ஹூ ஹா ஹா ...//

கவித, கவித, மறுபடியும் கவித :-)

RAD MADHAV said...

//VASAVAN said...

பரவாயில்லப்பா. என்னடா உருப்படியா பதிவு poduriyennu பார்த்தேன்.
ஆனா climaxla வழக்கம்போலவே mokkai தானா? :-)//

போட்டு தாக்குங்க எசமான் போட்டு தாக்குங்க :-))))))))))))))))

RAD MADHAV said...

// RAMYA said...
ஆனா நீங்க டாக்டர் இல்லையா??//

இதற்கு பதில் இங்கே
http://simpleblabla.blogspot.com/2009/03/blog-post_02.html :-)))

// ஒரு flight இருந்து இன்னொரு flight தாவினாரா?

அது எப்பூடின்னு கேளுங்க நம்பளும் ட்ரை பண்ணலாம் :))//
இதற்கு பதில் இங்கே :-))
http://simpleblabla.blogspot.com/2009/02/blog-post.html

RAD MADHAV said...

//Blogger ச.செந்தில்வேலன் said...

அசத்தீட்டீங்கோவ்வ்வ்....

பார்க்கற வேலைக்கும் படித்த படிப்பிற்கும் ஓரளவே தொடர்புள்ளது. படித்த படிப்பு முதல் படிக்கு மட்டுமே உதவும். மற்ற படிகள் எல்லாம் அவரவர் புத்தி, திறமை, நேரம், சொம்பு, ஜால்ரா, பணம் முதலியன மூலம் தீர்மானிக்கப்படுகிறது :))//

மிக்க நன்றி நண்பரே....

RAD MADHAV said...

//Blogger ஜெஸிலா said...

//பிரபல பதிவர்// இதுக்குதான் இவ்வளவு அலம்பலா :-)//

உண்மைய இப்படி பப்ளிக்கா போட்டு உடைக்கிறீங்களே? :-)

RAD MADHAV said...

//Blogger VASAVAN said...

//பத்தாம் வகுப்பில் நான் வகுப்பில் முதல் மாணவன்//

உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலயாப்பா ????? :-)//

பூமி உருண்டைனு சொன்னவர ஓட ஓட விரட்டுன உலகமுங்க இது.
எப்பத்தான் உண்மைய நம்ப போறீங்களோ???? ;-)

RAD MADHAV said...

//Blogger தமிழ்நெஞ்சம் said...

***** அதுக்கும் மேல இப்ப ஒரு ' பிரபல பதிவரா ' இருக்கேன். இதுக்கு மேல என்னங்க வேணுமுங்கோய்....

C l a s s i c//

Mikka Nanri.. Mikka Nanri

RAD MADHAV said...

//Blogger Karthick Krishna CS said...

இது போல என்னைப் பற்றி என் நண்பனோ, அவனைப் பற்றி நானோ எழுதும்போது, இருவருமே நல்ல நிலைமையில் இருப்போம் என நினைக்கிறேன்.... நீங்க என்ன பண்றீங்கன்னு கடைசி வரை ஒழுங்கா சொல்லலியே.. இல்ல நீங்க ஒழுங்கா எதுவும் செய்யறதில்லையா???//

Mikka Nanri Krishna.

RAD MADHAV said...

// கலையரசன் said...

//என்னைய ஒரு டாக்டர் ஆக்க வேண்டும் என்று என் பெற்றோருக்கு மோகம் இருந்தது.//

அட்லீஸ்ட் கம்பவுடர்ராவது ஆகுனிங்களா பாஸ்?
எல்லாரும் டாக்டர் ஆனா.. யாருதான்டா பேஷண்ட்டு...?
:-)))))))))))//
நீங்கதான் கலையரசன் :-))))

RAD MADHAV said...

//கரவைக்குரல் said...

அப்ப உங்கள் பெற்றோர் ஒரு பிரபல பதிவராக்க நினத்திருந்தால் இப்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்ன?
ஹிஹிஹிஹி

படித்தது எல்லாம் எப்போதும் எம்முடன் கூடி வரும்
என்றும் அது உதவியே
அது தொழிலுக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பயனுடையதே//

மிக்க நன்றி நண்பரே....

RAD MADHAV said...

// கோபிநாத் said...

நானும் கொசுவத்தி சுத்திக்கிட்டு இருக்கேன் இப்போ ;))//


ஷார்ஜாவிலுமா கொசு இருக்கு???? :-)

டக்ளஸ்... said...

Super thala..

RAD MADHAV said...

// டக்ளஸ்... said...

Super thala..//

மிக்க நன்றி டக்லஸ் அவர்களே...

ஹேமா said...

மாதவ்,வாழ்வில் நினைப்பதெல்லாம் நடப்பதாயில்லை.அதற்காக முயற்சியைக் கைவிடாமல் இருப்பதுதான் கெட்டித்தனம்.

RAD MADHAV said...

// ஹேமா said...

மாதவ்,வாழ்வில் நினைப்பதெல்லாம் நடப்பதாயில்லை.அதற்காக முயற்சியைக் கைவிடாமல் இருப்பதுதான் கெட்டித்தனம்.//

மிக்க நன்றி ஹேமா அவர்களே...

Ammu Madhu said...

//ஆறாம் வகுப்பு படிக்கும் போதே 'நானும் என் அப்பாவும் விமானத்தில் போகும்போது, என்ஜின் ரிப்பேர் ஆகிவிட, என் அப்பா என்னை துண்டால் முதுகில் கட்டிக்கொண்டு பக்கத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஒரே தாவாக தாவி விட்டார்' என்று ரீல் விட்டவன் இன்று மலேசியாவில் மென்பொருள் துறையில் இருக்கிறான்.//சூப்பரு...ஹி...ஹி..ரொம்ப நொந்துருப்பீங்க போலிருக்கே!!!

RAD MADHAV said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மு மது அவர்களே .......

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!
'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog