அன்பே நீ…இருபத்திநாலு காரட் தங்கம் என்றேன்…
நீ நகைக்கடைக்காரர் மகனா? என்றாள்…
உன் கன்னம் குலோப்ஜாமூன் என்றேன்…
உன் பெரியப்பாவுக்கு பேக்கரி இருக்கிறதா? என்றாள்..
வெறுப்பாகிப் போனேன்…
உனைக் காணாத கண்ணும் கண்ணல்ல என்றேன்…
நீ கண்ணதாசன் சொந்தக்காரனா? என்றாள்…
கடுப்பாகிப் போனேன்…
அன்னக்கிளி உன்னைத்தேடுதே..என்றேன்…
நீ இளையராசா ரசிகனா என்றாள்…
உனைக் காணாமல் என் மனம் கற்பூரம் போல் பற்றி எரிகிறது என்றேன்…
உன் சித்தப்பா அர்ச்சகரா? என்றாள்.
நொந்து நூலாகிப் போனேன்…
உன் மாமாவுக்கு டாஸ்மாக் கடை இருக்கிறதா? என்றாள்.
என் கண்கள் கலங்கி விட்டன…
கைய்யில் இருந்த மொபைலைத் தரையில் போட்டு உடைத்தேன்…
காட்டுக் கத்தலாய் கத்த ஆரம்பித்தேன்..
ஏண்டி…நீ என்ன பெரிய கிளியோபாட்ராவா??
மூஞ்சியும் முகரக் கட்டயும் பாரு…. வெள்ள எலி மாதிரி…
உன்னய விட்டா எனக்கு வேற ஆளு கிடக்காதுன்னு நினப்பா?
போடி…நீயும் ஒங்காதலும்..
காச விட்டெறிஞ்சா..உன்னய விட சூப்பர் பிகரு நூறு தானாக் கிடைக்கும்டி…
இன்னைக்கோட உனக்கும் குட் பை…உன் காதலுக்கும் குட் பை..
சொல்லி விட்டு இருக்கையை விட்டு எழுந்து திரும்பியவனின் கையைப் பிடித்தாள்…
முகத்தைத் திருப்பி கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்தாள்..
சிரித்தாள்…
‘ காதலா… இப்போது உன்னைப் பிடிக்கிறது…
காதலிக்கும் போது..
கவிஞனாய் மாறி..
கற்பனையில் மிதந்து பொய்கள் பேசாதே…
நிலத்தில் நின்று…நிஜ மனிதனாய்…நிஜத்தை நேரில் பேசு…
அது போதும்… எந்தப் பெண்ணின் இதயத்தையும் வெல்வதற்கு..’
2 அன்பு உள்ளங்கள்....:
கவிஞனாய் மாறி..கற்பனையில் மிதந்து பொய்கள் பேசாதே… நிலத்தில் நின்று…நிஜ மனிதனாய்…நிஜத்தை நேரில் பேசு… அது போதும்]]
அட ...
ரிவர்ஸ் பார்முலா தான் வொர்க் அவுட் ஆகும்னு சொல்றிங்களா!?
Post a Comment