இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்று கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்பதைப் பற்றி பலரும் தேடிக்கொண்டிருக்கின்றார்கள்....தூற்றுவார் தூற்றட்டும்......
போற்றுவார் போற்றட்டும்......
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழ்க்கை எனும் வண்டி ஓடிக்கொண்டிருக்கின்றது... அதை யாரும் மறந்து விட வேண்டாம்.
அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு.
'பூஜ்ஜியத்தின் உள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்..
அவனைப் புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்.'
கவிஞர் சொன்னது.....
இதோ கீழே வரும் பாடலைப் படியுங்கள்.
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையை தேடும் ஓடங்கள்
பிறக்கின்ற போதே....
பிறக்கின்ற போதே....இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே
கனவு காணும் வாழ்க்கை யாவும்
காலங்கள் மாறும்...
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
பேதை மனிதனே கடமைகள் இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்.......
இதை புரிந்து கொண்டால் போதும்.... கடவுளைப் பற்றிய தேடல் அடங்கி விடும்.
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரம் என்று
கரையை தேடும் ஓடங்கள்
பிறக்கின்ற போதே....
பிறக்கின்ற போதே....இறக்கின்ற தேதி
இருக்கின்றதென்பது மெய் தானே
ஆசைகள் என்ன ஆணவம் என்ன
உறவுகள் என்பதும் பொய் தானே
உடம்பு என்பது உண்மையில் என்ன
கனவுகள் வாங்கும் பை தானே
கனவு காணும் வாழ்க்கை யாவும்
காலங்கள் மாறும்...
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
வாலிபம் என்பது பொய் வேஷம்
தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி
போனது போக எது மீதம்
பேதை மனிதனே கடமைகள் இன்றே
செய்வதில் தானே ஆனந்தம்.......
இதை புரிந்து கொண்டால் போதும்.... கடவுளைப் பற்றிய தேடல் அடங்கி விடும்.
//
-
என் கருத்து எப்போதும் இதுதான்....
* மரணத்தின் நாழிகை முன்பே தெரிந்தால்?
* அடுத்த நொடி என்ன நிகழ்வு நிகழும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிந்தால்?
மனிதனிடம் கடவுள் நம்பிக்கை இருக்குமா என்பது சந்தேகமே....//
12 அன்பு உள்ளங்கள்....:
என்ன சொல்றதுன்னு தெரியலை!
பலவற்றை சொல்ல மனது நினைக்கின்றது ஆனால் முடியலை :(
யார் பதிவுல நீங்க பின்னூட்டுனீங்க
neengal sonnathaiye naan valimozhikireen madahav
விடு.. விடு.. பீல் பண்ணாத தலீவா!!
கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் சொந்த விஷயம்.
கடவுள் உண்டு என்றால் உண்டு. இல்லை என்றால் இல்லை.
அருள் நிறைந்த மரியே வாழ்க.... அல்லாஹ் அக்பர்....ஸ்வாமியே சரணம்....
எல்லாமே ஒன்று தானே....
வந்ததை வரவில் வைப்போம்.
சென்றதை செலவில் வைப்போம்.
இன்று போல் என்றும் ஒன்றாய் கொண்டாடுவோம்...
அவ்வளவுதாம்ப்பா வாழ்க்கை...
நண்பா இது என் கருத்து ...
//Blogger iTS mE & mYSELF said...
கடவுள், மூட நம்பிக்கை இரண்டும் கூடப்பிறந்தது...
இன்று மனிதர்கள் தெளிவடைந்து விட்டார்கள்.
இன்று 'தேவரின் தெய்வம், திருவிளையாடல்' எல்லாம் நூறு நாள் ஓடுமா?
மதங்கள் கூட அரசியல் கட்சிகளைப்போல 'உபதேசங்களால் ஊரை இன்று ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன.
நம்மை மீறிய, ஆட்டி வைக்கும் சக்தி ஒன்று இருக்கின்றது.
மனிதன் மதங்களை உருவாக்க, மதங்கள் தெய்வங்களை உருவாக்க .... இன்று அந்த தெய்வங்கள் பெயரால், உருவாக்கியவனே உருத்தெரியாமல் போய்விட்டான்.
கடவுளை மீறிய சக்தி இல்லை என்போம். அதே வாயால் கடவுள் பாதி மனிதன் பாதி என்போம்.
விதியை வெல்ல முடியாது என்போம். ஆனால் விதியை மதியால் வெல்லலாம் என்போம்.
நிலையான சூரியனை பூமி செவனே என்று சுற்றுகிறது.
ஆனால் இன்றும் பள்ளிக்கூடத்தில் 'சூரியன் காலையில் கிழக்கில் உதிக்கும், மாலையில் மேற்கில் மறையும்' என்று பாடம் நடத்திகொண்டிருக்கிறோம்.
இதுல பெருசா கடவுள் இருக்கா இல்லையா என்று பேசவும் வந்துட்டோம்.
மக்கா.... நாமெல்லாம் எப்பத்தான் திருந்தப்போரோமோ,,,,, தெரியல...
(போன தடவ
முனா கானா அண்ணன் தயவுல கிடச்ச மாதிரி ஐநூறு, ஆயிரம் கிடைக்கும்னு நினைச்சோம், படு பாவிங்க, இருநூரோட ஒதுக்கிட்டாங்க... அந்த டன்சன்ள இது வேற. ...//
"வானும், நீரும், காற்றும், நெருப்பும்
பொதுவில் இருக்குது.
மனுஷன் காலு பட்ட பூமி மட்டும்
பிரிஞ்சு கிடக்குது.
பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம்
மனிதன் இதயமே
உலகில் பிரிவு மாறி ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே. அமைதி நிலவுமே......"
இதையும் படிக்கவும்.....
//Blogger கோவி கண்ணன் + தமிழோவியா +தமிழச்சி said...
* ஆசைகளை அடக்கிக் கொள் வதற்கும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மனதை அடக்கிப் பழகுவதற்கும் ஆன்மிகம் நமக்குக் கற்றுத் தருகிறது.
* விலைவாசியைக் கட்டுப்படுத்த மட்டுமே நாம் முயற்சிக்கிறோம். ஆனால், யாரும் மனதைக் கட்டுப் படுத்துவதில் நாட்டம் கொள் வதில்லை.
* இரும்பிலும், துணியிலும் உற்பத்தித்திறனை அதிகரிக்கச் செய்வதில் ஆவல் கொள்கிறோம். அதைக் காட் டிலும் மனதில் நல்ல எண்ணங்களை உற்பத்தி செய்வதில்லை.
* புளிப்பு, கசப்பின்றி இனிமையாக இருக்கும் கனிகளை நாம் கடவுளுக்குப் படைக்க விரும்புகிறோம். ஆனால், தூய்மையான எண்ணங்கள் கொண்ட மனம் என்னும் கனியைப் படைக்கவே அவர் விரும்புகிறார்.
* வாழ்க்கையில் வசதிகளும், செல்வமும் வந்துபோகும். அதனால், அவற்றை நாடி வாழ்க்கையை வீணாக்கி விடக்கூடாது. நம்மால் முடிந்த சேவைகளைச் செய்வதே நிலையான அமைதியைத் தரும்.
* மனிதப்பிறவி கிடைப்பது அரிது. உலக இன்பங்களைத் தேடுவதிலும், அவை கிடைக்காவிட்டால் வேதனைப் படுவதிலுமே பொழுதைக் கழித்து விடுகிறோம்.
August 22, 2009 7:01 PM//
மாதவ்,கடவுள் நம்பிக்கை என்பது அவரவர் சூழ்நிலை வாழ்க்கை வசதிகளைப் பொறுத்தே இருக்கிறமாதிரி எனக்குத் தெரியுது.
If 'Diwali' contains 'Ali'
And 'Ramadan' the name of 'Ram'
Then what place has mis-understanding
Between Hindus and Muslims?
ரைட்டு!
நடத்துங்க!
Post a Comment