Sunday, March 29, 2009

உருப்படியான பதிவு......


உருப்படியான உபயோகமுள்ள பதிவு.....

வெளிநாட்டில் தனியாக வேலை செய்து வரும் மில்லியன் கணக்கான ஆண்களுக்கு சமர்ப்பணம்.

பெண்கள் வேண்டுமானாலும் படிக்கலாம். தவறு இல்லை.

**** வீட்டில் எறும்பு தொல்லையா ****
வெள்ளரிக்காய் தோலை எறும்புகள் அதிகம் இருக்குமிடத்தில் வைத்து விடுங்கள்.
எறும்புகள் அனைத்தும் ஓடி விடும்.

**** பிரிட்ஜில் சுத்தமான ஐஸ் வேண்டுமா ****
கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரை ஊற்றி வையுங்கள்.

**** வீட்டில் கண்ணாடிகள் பளபளக்க வேண்டுமா ****
ஸ்பிரிட் கொண்டு துடைத்துப்பாருங்கள்.

**** உடையில் ஒட்டிய சூயிங் கம் போகவில்லையா ****
துணியை ஒரு மணி நேரம் பிரீசரில் வைத்து விட்டு துவையுங்கள்.

**** வெள்ளை துணிகள் இன்னும் பளபளக்க வேண்டுமா ****
சுடு தண்ணீரில் ஒரு சிறு லெமன் துண்டை போட்டு துணிகளை பத்து நிமிடம் ஊற வையுங்கள்.

**** உங்கள் தலைமுடி பளபளப்பாக மின்ன வேண்டுமா ****
ஒரு டி ஸ்பூன் வினிகர் தலயில் தேய்த்து விட்டு பின் அலசிப்பாருங்கள்.

**** எலுமிச்சம்பழம் சாறு அதிக பட்சம் பிழிந்தெடுக்க வேண்டுமா ****
சுடு தண்ணீரில் பழத்தை ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து விட்டு பிழிந்து பாருங்கள்.

**** கையில் மீன் மனம் போக வேண்டுமா ****
ஆப்பிள் வினிகர் கொண்டு கைகளை கழுவுங்கள்.

**** வெங்காயம் நறுக்கும் போது கண்ணீர் வராமல் இருக்க வேண்டுமா ****
வாயில் சூயிங் கம் மென்று கொண்டே இருங்கள்.

**** உருளைக்கிழங்கு விரைவில் வேக வேண்டுமா ****
தோலை ஒரு புறம் மட்டும் சீவி விட்டு வேக வைத்து பாருங்கள்.

**** முட்டை விரைவில் வேக வேண்டுமா ****
கொதிக்க வைக்கும் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.

**** வாங்கும் மீன் பிரெஷ் என தெரிந்து கொள்ள ****
தண்ணீரில் போடுங்கள். மிதந்தால் சந்தேகமேயில்லை. புத்தம் புதுசு.

**** முட்டை வாங்கியாச்சு. நல்லதா கெட்டதான்னு தெரியனுமா ****
தண்ணீரில் போடுங்கள்.
படுக்கையாக இருந்தால் புத்தம் புதுசு
லேசாக சாய்ந்திருந்தால் மூணு அல்லது நாலு நாள் பழசு.
நட்டமா நின்னா, பத்து நாள் பழசு.
கடைசியா மிதந்துச்சுன்னா மொக்க பழசு. கீழ போடுறது நல்லது.

**** உடையில் பட்ட இங்க் கறை போக வேண்டுமா ****
டூத் பேஸ்ட்டை கறை பட்ட இடத்தில் தடவுங்கள். காயட்டும். துவையுங்கள்.

**** வீட்டில் எலி, பூச்சி தொல்லை ஒழிய வேண்டுமா ****
பெப்பெர் துகளை அந்தந்த இடங்களில் தூவி விடுங்கள். எல்லாம் ஓடி விடும்.


பின் குறிப்பு:-
*** இரண்டு நாட்களாக இரவு பகல் கண்முழித்து, ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தது. மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்து மூளையை பிழிந்து கசக்கிய போது கிடைத்தது **** அவ்வளவுதாங்க. இதுக்கு மேல ஒண்ணும் இல்ல.

Sunday, March 22, 2009

பெண்ணே நீ பேயா, பிசாசா? இல்லை தேவதையா???? - பாகம் இரண்டு...

வாழ்வில் எதிர்பாராமல் வந்த புயல் ....கூடவே இடியும் மின்னலும்....
பெண்ணே நீ பேயா, பிசாசா? இல்லை தேவதையா????

மெகா சீரியல் - எபிசோட் இரண்டு

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம்
ஒன் அன்ட் ஒன்லி ராட் மாதவ்


இந்த பதிவை படிக்கும் பெண்களுக்கு நிச்சயமாக 'ஆண்களின் மகத்துவம்' புரியும்.

படிக்கும் ஆண்களுக்கு அவர்களின் பெருமை புரியும்.

ஸ்டார்ட், கேமரா...ஆக்சன்........................................

ஒரு ஆறு, அதன் கரையில் ஒரு அரச மரம். அந்த மரக்கிளையில் இருந்து கொண்டு ஒரு ஆசாரி கோடாலியால் வெட்டிக் கொண்டிருந்தார்.

ஒரு நொடி கவனம் சிதறியது. கோடாலி ஆற்றினுள்ளில்.

ஆசாரிக்கு நீச்சல் தெரியாது. என்ன செய்வது.
கோடாலி இல்லையேல் மரம் இல்லை.
மரம் இல்லையேல் பணம் இல்லை.
பணம் இல்லையேல் உணவு இல்லை.

கலங்கியவர் உரக்க கதறிக்கொண்டே இறைவனை விளித்தார்.

'ஹே கடவுளே, ராதா மாதாவா, என்னை காப்பாத்து.......

உடன் கடவுள் தரிசனம். 'மகனே! எனை ஏன் அழைத்தாய்?.

கடவுளே
, எனக்கு என் கோடாலி வேண்டும். அது இல்லை எனில் என்னால் பிழைக்க முடியாது. அருள் புரிவீராக??

கடவுள் ஒரே குதியாக ஆற்றில் குதித்து வெளி வந்தார். ஆஹா... கையில் ஒரு தங்கக் கோடாலி.

'மகனே இதுதானா?'

' இல்லை இறைவா'

கடவுள் மீண்டும் குதித்து வெளிவந்தார்.

இப்போது ஒரு 'சில்வர் கோடாலி'

மகனே 'இதுதானா'.

'இல்லை கடவுளே'

மீண்டும் கடவுள் பொறுமையாக குதித்து வெளி வந்தார். இப்போது ஒரு இரும்பு கோடாலி.

கடவுள் வாய் திறக்கும் முன்பே ஆசாரி 'ஆனந்தத்தில்' ஹீரோ 'ராத் மாதவ்
ஸ்டைலில் துள்ளி ஆடிக்கொண்டே

'எஸ் மை லார்ட், இட்ஸ் மை கோடாலி யேதான்' என்றார்.

கடவுளுக்கு ஆச்சர்யம். புல்லரிப்பு... நமது ஸ்ருஷ்டியில் ஆண்கள் இவ்வளவு நல்லவர்களா? கடவுளுக்கும் கண்கள் பனித்தது. இதயம் இனித்தது. மனம் மகிழ்ந்த அவர் 'மூன்று' கோடாலிகளையும் ஆசாரிக்கு பரிசாக அளித்து விட்டு பறந்து விட்டார்.

ஆசாரிக்கோ பிலாக்கில் இருநூறு பின்னூட்டம் கிட்டிய பதிவர் மனசு போல் ஆனந்தம்.

நாட்கள் உருண்டோடின....

அதே ஆறு, அதே மரம், அதே கரை.

ஆசாரியும் அவரது அருமை மனைவியும் நடந்து கொண்டிருந்தனர்.

காலத்தின் கட்டாயம் அல்லது விதியின் சதி அல்லது ஆசாரியின் நல்ல நேரம். மனைவி திடீரென ஆற்றுக்குள் விழுந்து விட்டார்.

நீச்சல் தெரியாத ஆசாரி மீண்டும் கதறினார்.

'ஹே கடவுளே, ராதா மாதாவா, என்னை காப்பாத்து......

உடன் கடவுள் தரிசனம். 'மகனே! எனை ஏன் அழைத்தாய்?.


"Oh Lord, my wife has fallen into the water!"

கடவுள் ஒரே குதியாக ஆற்றில் குதித்து வெளி வந்தார்.
ஆஹா.... கொண்டு வந்தது 'அசின்' சினிமா நடிகை.

'மகனே! நன்றாகப் பார்த்து சொல், இதுதானா உன் மனைவி?

'ஆமாம் இறைவா, இதுதான் என் மனைவி, ஆசாரி அழுதுகொண்டே கூறினார்.

கடவுளுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. நமக்கே மொக்கையா???

கடவுள் சீறினார். 'கொடியவனே, நயவஞ்சகா, பேராசை பிடித்தவனே, இது உன்மனைவி இல்லை என்று தெரிந்தும் என்னிடம் நீ பொய் சொல்கிறாய்' சுட்டெரித்து விடுவேன் உன்னை'

கடவுளின் காலைப்பிடித்துக்கொண்டு ஆசாரி அழ ஆரம்பித்தார்.

'இறைவா, கடவுளே, ஓ மை லோர்ட், இது எனது புரிந்து கொள்ளும் திறனுக்கு பற்றிய ஒரு சிறு தவறாக இருக்கலாம்.
ஏன் எனில், நான் 'இல்லை' என்று சொன்னால் இரண்டாவது முறை நீங்கள் 'நயனதாராவை' கொண்டு வருவீர்கள். அப்போதும் இல்லை என்று சொன்னால் மூன்றாவதாக என் மனைவியை கொண்டு வருவீர்கள். நானும் 'ஆமாம்' என்பேன். இறுதியில் என் நேர்மையை பாராட்டி மூன்றையும் என் தலையில் கட்டி விடுவீர்கள்.

நான் ஏழை தலைவா, என்னால மூணு பொம்மனாட்டிகள வச்சு குடும்பம் நடத்த முடியாது....அதனாலதா அப்படி பொய் சொன்னேன்!!!!

கடவுளுக்கு புல்லரித்தது. அவனை ஆசிர்வதித்து விட்டு பறந்து போனார்.

************

இந்த கதையோட 'தத்துவம்' என்னான்னா????
ரஜனி ஸ்டைல்ல....

ஆம்பளையும் பொய் சொல்வான், பொம்பளையும் பொய் சொல்லும்.
ஆனா, ஆம்பள பொய் சொன்னா, அது நல்லதுக்கு, நாலு பேர காப்பாத்துறதுக்கு, நேர்மைக்கு, இது மாதிரி இன்னம் நிறைய....

ஆனா... ஒரு பொம்பள பொய் சொல்றது, தன்ன மட்டும் காப்பாத்திகிடுறதுக்கு ...ஹ....ஹ...ஹ...ஹா........

இப்ப தெரியுதா உண்மை.........

*******

இந்த பதிவுக்கு என்ன ஊக்குவிச்ச லிங்க்
கணவர்கள் விற்பனைக்கு.....

நன்றி: துரை மாமா அனுப்பிய மின்னஞ்சல்

Saturday, March 21, 2009

கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்????




'கல்யாண மோதிரம்' ஏன் நான்காவது விரலில் மட்டும் சூடப்படுகின்றது?
இதற்கு சீனாவில் ஒரு அருமையான விளக்கம் உள்ளது.

பெருவிரல் - நம் பெற்றோர்களை குறிப்பது.

ஆள்காட்டி விரல் - நம் உடன்பிறப்புகளை குறிப்பது.

நடுவிரல் - நம்மை குறிப்பது.

மோதிர விரல் - நம் வாழ்க்கை துணையை குறிப்பது.

சிறுவிரல் - நம் வாரிசுகளை குறிப்பது.


முதலில் இரு உள்ளங்கைகளை முகம் நோக்கி விரித்து கொள்ளுங்கள்.

இரண்டு நடு விரல்களையும் (நம்மை குறிப்பது) கீழ் நோக்கி வளைத்து நகமும் நகமும் தொட்டு கொள்ளும்படி இறுக்கமாக வைத்து கொள்ளுங்கள்.

உள்ளங்கையை அப்படியே மூடுவது போல் வைத்து மற்ற நான்கு விரல்களும் முனையோடு முனை தொடும்படி வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது பெரு விரல்களை (பெற்றோர்கள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் பெற்றோர்கள் நம்முடன் காலத்தின் விளையாட்டு காரணம் கடைசி வரை இருக்க மாட்டார்கள்.

இப்போது பெரு விரல்களை இணைத்து கொள்ளுங்கள். ஆள்காட்டி விரல்களை (உடன் பிறப்புகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் உடன் பிறந்தவர்கள் ஒரு வயது வந்தவுடன் அவரவர் வாழ்க்கையை தனியாக அமைத்துக்கொண்டு போய் விடுவர்.

ஆள்காட்டி விரல்களை இணைத்து கொள்ளுங்கள். சுண்டு விரல்களை (நம் குழந்தைகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் நம் குழந்தைகள் வளர்ந்து பெரிதாகி, கல்யாணம், என்று நம்மை விட்டு பிரிந்து விடுவர்.

கடைசியாக, சுண்டு விரல்களை சேர்த்து கொண்டு, மோதிர விரல்களை (வாழ்க்கைத்துணை) பிரித்து பாருங்கள். ம்ம்... பிரித்து பாருங்கள். என்ன ஆச்சர்யமாக இருக்கின்றதா???? ம்ம் ....ம்ம்.....ம்ம்ம்ம்.....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...
முடியாது.
ஏனெனில் வாழ்க்கைத்துணை (மனைவி/கணவன்) மட்டுமே இடையில் வந்தாலும் இறுதி வரை என்றுமே கூட இருப்பது.

Wednesday, March 18, 2009

டைகர் - இதை பார்த்து பயப்படாதவர்கள் யாராவது உண்டா?

டைகர் - இதை பார்த்து பயப்படாதவர்கள் யாராவது உண்டா?
அதும் ஒரே சமயம் இருபது டைகர்கள் சேர்ந்து வந்தால்????
இருபது டைகர்களை ஒரே சமயத்தில் ஒன்றாக பார்ப்பது என்பது காணக்கிடைக்காத காட்சி. அறிய காட்சி. அபூர்வ காட்சி.
நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் இதை அனுப்பிய போது பூரித்து போய் விட்டேன்.
'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'
இது என் தாரக மந்திரம்.

உருட்டுங்கள் உங்கள் எலியை 'கீழ் நோக்கி'

/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/
/

பார்த்து மகிழ்ந்தால் கீழே பாராட்டுகளை தெரிவியுங்கள்.
இரு கரம் கூப்பி வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமொஸ்கார்.....
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`
`

படத்தை கிளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்....

Thursday, March 12, 2009

தேனிசை.... இதுதான்...........அ, ஆ.......

'அ' , 'ஆ' வில் துவங்கும் அருமையான பழைய திரை கீதங்கள்.

மகாராசன் 'கார்த்திக்கின்' விருப்பத்திற்கிணங்க ஓராயிரம் வேலைப்பளுவிற்கு இடையிலும் 'அதிரடியாக' இந்தப்பாடல்களும் சேர்க்கப்படுகின்றன.

1963
பெரிய இடத்துப்பெண் டி எம் எஸ், பி சுசீலா

அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா
ஆ... ஆ....
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா....
---
அம்பிகாபதி கண்ட நிலா
அமராவதியைத் தின்ற நிலா
கம்பன் பாடிய வெள்ளி நிலா
கவியில் ஆடிய பிள்ளை நிலா
-----
காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜுலியட் வென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாலைவனத்தின் வண்ண நிலா
-----
நாடுதோறும் வந்த நிலா
நாகரீகம் பார்த்த நிலா
பார்த்து பார்த்து சலித்த நிலா
பாதி தேய்ந்து வெள்ளி நிலா




1959
அமுதவல்லி திரைப்படத்தில்
டி ஆர் மகாலிங்கம், பி சுசீலா பாடியது

-----

ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ

குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
-----
துள்ளி துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை
சொந்தம் உள்ள ராணி இவள் நாக மங்கை

எல்லையற்ற ஆசையில் ஓடி வந்தாள்
தள்ளி விட்டுப் போன பின் தேடி வந்தாள்
கிளைதான் இருந்து கனியே சுமந்து
தனியே கிடந்த கொடி தானே
கண்ணாளன் உனைக் கலந்தானந்தமே பெற
காவினில் வாழும் கிளி நானே
-----
அந்தி வெயில் நிறத்தவளோ
குலுங்கும் அள்ளி மலர் இனத்தவளோ

உந்தி உந்தி விழும் நிலையில்
ஓடி விளையாடி மணம் சிந்தி வரும் தென்றல் தானோ
இன்பம் தந்த மயில் இவள் தானோ

அன்பு மனம் கூடுவதில் துன்பமில்லை
அஞ்சி அஞ்சி ஓடுவதில் லாபமில்லை
வீணை மட்டும் இருந்தால் நாதமில்லை
மீட்டும் விரல் பிரிந்தால் கானமில்லை
இதயம் கனிந்து எதையும் மறந்து
இருவர் மகிழ்ந்து உறவாட
நன் நேரமிதே
மனம் மீறிடுதே
மன மாளிகை ஓரம் ஆடிடுவோம்

ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ

குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ

-----


1960
ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில்
டி எம் சௌந்தரராஜன் பாடியது



ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு

தெய்வத்தின் கட்டளை ஆறு

-----

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி

இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி

சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்

எல்லா நன்மையும் உண்டாகும்.

-----

உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்

நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்

உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்

இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்

-----

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்

அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்

இதில் மிருகம் என்பது கள்ள மனம்

உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்

இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

-----

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு

தெய்வத்தின் கட்டளை ஆறு



1960

மன்னாதி மன்னன் திரைப்படத்தில்

டி எம் சௌந்தரராஜன் பாடியது


அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா
-----
கனக விசயரின் முடி தலை தெறித்து
கல்லினை வைத்தான் சேர மன்னன்
இமய வரம்பினில் மீன் கோடி ஏற்றி
இசை பட வாழ்ந்தான் பாண்டியனே
-----
கருவினில் மலரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை
களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை
-----
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்கள் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
-----
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா


1957

தங்கமலை ரகசியம் திரைப்படத்தில்

பி சுசீலா பாடியது
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ
-----

இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியைப் பாராய்
புது மலர் மேனி வாடி விடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ
-----
மனதில் ஆசையை மூட்டிய பின்னே
மறைந்தே ஓடிடலாமா ஆ...
இளமை நினைவும் இனிமை வளமும்
கனவை கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ
-----
அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ


1966

நாடோடி திரைப்படத்தில்

டி எம் எஸ், பி சுசீலா பாடியது


அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயோ வெண்ணிலவே

அன்று ஒரு நாள் ஆனந்தத் திரு நாள்
இன்று நினைத்தால் என்னென்ன சுகமோ

பாதி விழிகள் மூடிக் கிடந்தேன்
பாவை மேனியிலே - நீ
பார்த்தாயே வெண்ணிலவே
-----
வானும் நதியும் மாறாமல் இருந்தால்
நானும் அவளும் நீங்காமல் இருப்போம்

சேர்ந்து சிரிப்போம் சேர்ந்து நடப்போம்
காதல் மேடையிலே - நீ
சாட்சியடி வெண்ணிலவே

அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயோ வெண்ணிலவே

-----
அன்றொரு நாள் இதே நிலவில்
அவர் இருந்தார் என் அருகே
நான் அடைக்கலம் தந்தேன் என் அழகை
நீ அறிவாயோ வெண்ணிலவே

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog