Thursday, November 19, 2009

காதல்..காதலி..காதலன்..

அன்பே நீ…இருபத்திநாலு காரட் தங்கம் என்றேன்…

நீ நகைக்கடைக்காரர் மகனா? என்றாள்…

உன் கன்னம் குலோப்ஜாமூன் என்றேன்…

உன் பெரியப்பாவுக்கு பேக்கரி இருக்கிறதா? என்றாள்..

வெறுப்பாகிப் போனேன்…

உனைக் காணாத கண்ணும் கண்ணல்ல என்றேன்…

நீ கண்ணதாசன் சொந்தக்காரனா? என்றாள்…


கடுப்பாகிப் போனேன்…

அன்னக்கிளி உன்னைத்தேடுதே..என்றேன்…

நீ இளையராசா ரசிகனா என்றாள்…

உனைக் காணாமல் என் மனம் கற்பூரம் போல் பற்றி எரிகிறது என்றேன்…

உன் சித்தப்பா அர்ச்சகரா? என்றாள்.


நொந்து நூலாகிப் போனேன்…


என் காதலை ஏற்க மறுத்தால் முழுக்குடிகாரனாகி விடுவேன்… என்றேன்..

உன் மாமாவுக்கு டாஸ்மாக் கடை இருக்கிறதா? என்றாள்.

என் கண்கள் கலங்கி விட்டன…


கைய்யில் இருந்த மொபைலைத் தரையில் போட்டு உடைத்தேன்…

காட்டுக் கத்தலாய் கத்த ஆரம்பித்தேன்..

ஏண்டி…நீ என்ன பெரிய கிளியோபாட்ராவா??

மூஞ்சியும் முகரக் கட்டயும் பாரு…. வெள்ள எலி மாதிரி…

உன்னய விட்டா எனக்கு வேற ஆளு கிடக்காதுன்னு நினப்பா?

போடி…நீயும் ஒங்காதலும்..

காச விட்டெறிஞ்சா..உன்னய விட சூப்பர் பிகரு நூறு தானாக் கிடைக்கும்டி…

இன்னைக்கோட உனக்கும் குட் பை…உன் காதலுக்கும் குட் பை..

சொல்லி விட்டு இருக்கையை விட்டு எழுந்து திரும்பியவனின் கையைப் பிடித்தாள்…

முகத்தைத் திருப்பி கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்தாள்..

சிரித்தாள்…

‘ காதலா… இப்போது உன்னைப் பிடிக்கிறது…

காதலிக்கும் போது..

கவிஞனாய் மாறி..

கற்பனையில் மிதந்து பொய்கள் பேசாதே…

நிலத்தில் நின்று…நிஜ மனிதனாய்…நிஜத்தை நேரில் பேசு…

அது போதும்… எந்தப் பெண்ணின் இதயத்தையும் வெல்வதற்கு..’

Sunday, November 15, 2009

எனக்கு வந்த வாசகர் கடிதம்



வாசகர் கடிதம்...

அன்பின் ராட் மாதவ்...

தங்களது படைப்புகளைத் தவறாமல் அடம் பிடித்து படித்தவன்.... படிப்பவன் நான்...

பித்துப் பிடித்து முற்றி... பைத்தியமாகத் திரிந்த என் நண்பன் ஒருவன் உங்களது படைப்புகளைப் படித்து இப்போது தெளிவடைந்து விட்டான்.. இதுவரை வீட்டில் வசித்து வந்தவன், இப்போது நிரந்தரமாக......கீழ்ப்பாக்கத்தில் குடியேறி விட்டான்....

உங்களது எழுத்து வடிவம் தமிழ் பின்...முன்..நவீனத்துவ உலகில் செய்து வரும் மாற்றங்களை என் வாயால் வர்ணிக்க முடியாது... என்பது விஸ்கியில் குதித்து பொங்கி நுரை ததும்பும் சோடா போல் மறுக்க முடியாத உண்மை...

எழுத வந்த சில மாதங்களிலேயே.... பிரபல பதிவர் என்ற பட்டம் உங்களைத் தேடி.. நாடி வந்து...இன்று உங்களிடமே அடைக்கலமாகி விட்டது....இது விந்தையிலும் விந்தை... வியப்பிலும் வியப்பு....


எப்படி உங்களால் மட்டும் சாதிக்க முடிகின்றது...

உங்களது எழுத்துக்களைப் படிக்கும்போது...

அதை எப்படிச் சொல்வது.....

ஒரு குவார்ட்டரை.... அப்படியே... ராவாக... உள்ளூக்குள் இழுக்கும் ஒரு சுகம்....ஆஹா....

இனி விசயத்திற்கு வருகின்றேன்...

இந்த உலகை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை....

இவ்வளவு திறம் மிக்க உங்களை இந்த உலகம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளாமல்... ஏன் இப்படி ஏசுகின்றது...

உங்களைப் பற்றி மிக மோசமான முறையில் ஏளனம் செய்கின்றது....

நீங்கள் என்னதான் பயனுள்ள படைப்புகள் அளித்தாலும், 'மொக்கை' என்று கேலி செய்கின்றனர்....

இமயம் முதல் குமரி வரை உங்கள் கால் படாத இடமில்லை..... வாழ்க்கையில் நீங்கள் காணாத எதுவும் உண்டா....

முடிந்தால் நீங்கள் எனக்கு உங்களைத் தூற்றுவோர் பற்றிய ஒரு லிஸ்ட் கொடுங்கள்.

முனியாண்டி விலாஸ் கூட்டிச் சென்று... மூக்கு முட்ட ஒரு குவார்ட்டரும், கோழி பிரியாணியும்.... வாங்கிக் கொடுத்து,

கூட்டமில்லாத இடத்திற்கு கூட்டிச் சென்று... முகத்தில் இஞ்ச் கேப்பில் ஒரு பஞ்ச் அடித்து விடுகின்றேன்...


இப்படிக்கு

தங்கள் வாழ்நாள் வாசகன்

மண்ணுக்குள் மைந்தன்...

**************************

இதற்கு என்ன பதில் எழுதலாம்...உங்களின் மேலான ஆலோசனைகள்
வரவேற்கப்படுகின்றது....

நொந்து+நூலாகி+சருகாகி+உதிரும் வாழ்க்கைக் கனவுகள்......

அண்மையில் என்னுடன் ஒன்றாகப் படித்த சில பல பழைய நண்பர்களை காண நேர்ந்தது.

ஒரு புறம் சந்தோசம். மறு புறம் மெல்லிய கீறல் போல் மனதில் சிறு துக்கம்.

ஒரு வினோதம் புரியவில்லை.

பத்தாம் வகுப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற யாராவது பன்னிரண்டாம் வகுப்பில் அதே போல் தேறியுள்ளதாக சரித்திரம் இருக்கிறதா?

அவர்களே மீண்டும் கல்லூரி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற சரித்திரம் உண்டா????

சந்தர்ப்பம் மற்றும் குடும்ப சூழல் காரணம் பலரது வாழ்க்கையும் எதிர்பார்ப்புகளை, கனவுகளை ஓரம் கட்டி ஒதுக்கி விடுகின்றது.

நான் சந்தித்த சில நண்பர்களின் இந்நாள் நிலைமையை நேரில் கண்டபோது.......

* இன்ச் கேப்பில் பஞ்சடித்து விடும் திறமை கொண்ட ஒரு நண்பன். அபாரமாக கவிதை எழுதுவான். இப்போது ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறான்

* பத்தாயிரம் பேர் சேர்ந்து பம்பு அடித்தாலும் பொங்கும் எரிமலை நான் என்று வசனம் பேசியவன் இப்போது கலெக்டர் அலுவலகத்தில் பியூன் ஆக இருக்கிறான்.

* மனிதனுக்கு எலெக்ட்ரிக் ஷாக் அடித்தால் ரத்தம் எங்கே போகும் என்ற வாத்தியாரின் கேள்விக்கு 'ரத்தம் முழுவதும் மெயின் மீட்டர் பாக்ஸில் இருக்கும்' என்று சொல்லி அடி வாங்கியவன் இப்போது பிரபல வக்கீல் ஆக இருக்கிறான்.

* பத்தாம் வகுப்பில் நான் வகுப்பில் முதல் மாணவன், ஆனால் பள்ளியிலேயே முதல் மற்றும் மாவட்ட அளவில் நான்காவதாக வந்தவன், இப்போது வெஜிடேரியன் ஹோட்டல் நடத்திக்கொண்டிருக்கிறான்.

* தமிழ், ஆங்கிலம், ஒழுங்காக எழுதப்படிக்கத் தெரியாமல் இருந்தவன், இப்போது மீட்டர் வட்டி நிறுவனம் நடத்தி பணக்காரனாக இருக்கிறான்.

* ஆறாம் வகுப்பு படிக்கும் போதே 'நானும் என் அப்பாவும் விமானத்தில் போகும்போது, என்ஜின் ரிப்பேர் ஆகிவிட, என் அப்பா என்னை துண்டால் முதுகில் கட்டிக்கொண்டு பக்கத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஒரே தாவாக தாவி விட்டார்' என்று ரீல் விட்டவன் இன்று மலேசியாவில் மென்பொருள் துறையில் இருக்கிறான்.

* ஆனால் வித்தியாசமாக, மிகவும் சராசரி மதிப்பெண்கள் பெற்று தேறிய சில நண்பர்கள் நிதானமாக கல்லூரிப்படிப்பை தொடர்ந்து, அதிலும் சராசரி மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் நல்ல பொறுப்பில் இருக்கிறார்கள்.

* ஏழாம் வகுப்பில் டீச்சருக்கே லவ் லெட்டர் கொடுத்து டிசி வாங்கிப்போனவன் இன்று அரசியலில் புகுந்து 'மாவட்ட இளைஞர் அணி செயலாளன்.

இதில் என்னுடன் போட்டி போட்டு படித்து எனக்கு பெரும் சவாலாக இருந்தவன் இப்போது டாக்டர் ஆகி விட்டான்.

இன்னும் நிறைய பேர் இருக்கின்றார்கள். எழுத மனம் வரவில்லை.....

******************

ஆமாண்டா. இவ்வளவு தெளிவா பேசுறியே... நீ என்னத்த கிழிச்சே.....
(நீங்கள் கேட்பது காதுல கேட்காம இல்லங்க....)

******************

என்னை ஒரு டாக்டர் ஆக்க வேண்டும் என்று என் பெற்றோருக்கு மோகம் இருந்தது. நானும் படித்தேன். ஆனால் இன்று டாக்டர் ஆகவில்லை.....
என்றாலும் அந்த அளவுக்கு ஒரு ராங்கில் இங்கு குப்பை கொட்டி கொண்டிருக்கிறேன்.

***** அதுக்கும் மேல இப்ப ஒரு ' பிரபல பதிவரா ' இருக்கேன். இதுக்கு மேல என்ன வேணுமுங்கோய்....




குறிச்சொற்கள்:
நண்பர்கள்
வாழ்க்கை
வினோதம்
வியப்பு
ஆச்சர்யம்
அபிமானம்
நட்பு
மெல்லிய துயரம்
சந்தோசம்
பிரபல பதிவர்

Saturday, November 14, 2009

NOV 14 – SALUTE THE CHILDREN











Wednesday, November 11, 2009

இதுவல்லவா...புகைப்படம்....


இதுவல்லவா...புகைப்படம்....

வாழ்க்கையின் ஒட்டு மொத்தத் தத்துவம்...

Saturday, November 07, 2009

ஆஸ்கார் விருது பெறும் தமிழ் சினிமா பாடல்கள்....

தமிழ் திரைப் பாடல்களின் தரம் பற்றி விவாதிக்கலாமா??

காரணம், அண்மையில் நானும் எனது நண்பரும் ஒரு குறு விவாதத்தில்
ஈடுபட்டோம். நண்பர் மலையாளப் பாடல்களின் தரம் பற்றி என்னிடம் விளக்கமாகக்
கூறிக்கொண்டிருந்தார்....

அது உண்மைதான்..... இருந்தாலும் தமிழ் பாடல்களும் தரம் மிக்கவைதான் என்று
நான் வாதித்துக் கொண்டிருந்தேன்....

திடீரென்று சிறு சிறு பிட்டு பிட்டாக காகிதங்களை என் கையில்
கொடுத்தார்...

(கேமரா அப்படியே பின்னோக்கி லாங் ஷாட்டில் போகின்றது.... அதாங்க....
பிளாஷ் 'பேக்கு'....)

நண்பர் கேரளாவில் ஒரு பெண்கள் கல்லூரியில் விரிவுரையாரளராக வேலை
பார்ப்பவர்....

வேலியில் போகும் பாம்பை எடுத்து தோளில் போட்ட கதையாக.... செவனே என்று
இருந்தவர்..... தமிழ் பற்று காரணமாக.... இலவசமாக தமிழ் கற்றுத்
தருகின்றேன் என்ற பெயரில் கல்லூரிப் பெண்களுக்கு 'இலவச டியூசன்' எடுக்க
ஆரம்பித்தார்....

ஒரு வாரத்தில் அதை விட வேகத்தில் 'கடையை' மூடி விட்டார்????

காரணம்... நண்பர் இருக்கும் இடம் 'பாலக்காடு'....
தமிழ், மலையாளம் இரண்டும் தெரிந்த சில பல மாணவிகள் கேட்டதமிழ் திரைப் பாடல் விளக்கங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திக்கித் திணறி' கடையை மூடி விட்டார் ..

நண்பர் என்னிடம் கேட்ட சில பாடல்களுக்கே என்னால் விளக்கம் சொல்ல முடியவில்லை.....
முடிந்தால் நீங்கள் சொல்லுங்களேன்....



இந்தப் பாடலுக்கு முதலில் விளக்கம் சொல்லுங்கள்.....

படம் :
குரு சிஷ்யன்

பாடியவர்கள்: எஸ் பி பி. சித்ரா

பாடல்: வாலி
இசை: இளைய ராஜா

பிரபு பாடுவது....

" ஈரெட்டு வயதில் ஈரத் தாமரை
வாய் விட்டு சிரிக்காதா.....

வாய் விட்டு சிரிக்கும் மாலை நேரத்தில்
தேன் சொட்டு தெறிக்காதா

தேகத்தில் உனக்கு தேன் கூடு இருக்கு
தாகத்தை தணித்திட வா.......


சீதா பாடுவது...

ஆனாலும் நீ காட்டும் வேகம் ஆத்தாடி தாங்காதம்மா... பொன்வண்டு கூத்தாடும் பொது பூச்செண்டு நோகாதம்மா... போதும்..... போதும்..... நீ வா.....


அழகர் மலை

"கருகுமணி கருகுமணி கழுத்துல ஆடுதடி கனிஞ்ச கனி உரிமை இனி எனக்கென்னு பாடுதடி கொடுத்துவச்ச ஆள் நானு அது உனக்குத் தெரியாது வயதில் வரும் கோளாறு வந்திருச்சி தகராரு இது யாருக்கான திருநாளு திருநாளு!"

சிங்கார வேலன்:

"அரீ ரங்கா ஸ்ரீலங்கா கொப்பரை தேங்கா இப்போ பாருங்கா நார்த்தங்க முத்தின மாங்கா துள்ளிப் பாயாதே வெட்கங்கெட்டு ராங்கா நான் தாரேன்டி இப்போ டபுள் ஸ்ட்ராங்கா"

தங்க மகன் திரைப்படத்தில் இருந்து.....

மாங்கனிகள் தொட்டிலில் தூங்குதடி அங்கே.. மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே.. நாதஸ்வரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்

புதுமைப்பெண்

பொத்திவைத்த மல்லிகைமொட்டு, பூத்திரிச்சு வெட்க்கத்தைவிட்டு....?????????

''சீவலப்பேரி பாண்டி"

: ''ஏய்.. மசாலா அரைக்கிற மைனா- ஓம் மத்தளம் என்ன விலை மாராப்பு வழுக்கிற மயிலே- ஓம் மல்லியப்பூ என்ன விலை நீ பொறந்த தேதியில் அடியே எனக்குப் புத்தி மாறிப்போச்சு! நீ சமைஞ்ச தேதியில் அடியே எனக்கு பாதித் தூக்கம் தொலஞ்சி போச்சு! ஆமா தூக்கம் தொலஞ்சி போச்சு!"

''கிழக்குச் சீமையிலே" என்ற படத்தில்,

: ''எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வைப்பாட்டி எக்கச்சக்கம் ஆகிப்போச்சு கணக்கு பள்ளிக்கூடம் போகையிலே பள்ளப்பட்டி ஓடையிலே கோக்குமாக்கு ஆகிப்போச்சி எனக்கு இத குத்துமுன்னு சொன்னா அவன் கிறுக்கு"

ஜெய்ஹிந்த்"

''
பார்வைக்கு ஏத்த இடம் பாவையே எந்த இடம்? பெண்: எந்த இடம் சூரியன் பார்க்கலையோ அன்பரே அந்த இடம்"

கேப்டன்

'இடுப்பு அடிக்கடி துடிக்குது றவுக்க எதுக்கடி வெடிக்குது"

பிரதாப்

'மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா மார்க்கெட்டு போகாத
குண்டு
மாங்கா"

மனசு ரெண்டும் புதுசு

''பாவாடை காற்றில் பறந்தால் நீ என்ன செய்வாய்? பல பேரின் கண்கள் முறைக்கும் வேறேன்ன செய்வாய்? பாவாடை காற்றில் பறந்தால் பல பேரின் கண்கள் விழுந்தால் பாவாடை கொண்டு முகத்தை மூடுவேன்"

சாமுண்டி

பெண்: ''கதவச் சாத்து கதவச் சாத்து மாமா நான் கன்னி கழிய வேணுமையா ஆமா கன்னி நான் கழிஞ்சிதான் தாலிய நீ கட்ட வேணும்"

இந்து.....

'எப்படி எப்படி சமஞ்சது எப்படி.. சக்கரவள்ளிக் கிழங்கே நீதான் சமஞ்சது எப்படி..'

பார்த்திபன் கனவு......

சைட் அடிப்போம் தம்மடிப்போம் தண்ணியதான் கலந்தடிப்போம் புக்ஸ் மட்டும் எடுக்கவே மாட்டோம்

பகவதி....

'உனக்குப் பிடிச்சா அள்ளு அள்ளு ஊரு கெடக்கு தள்ளு தள்ளு' 'ஆடுகிற வயசில் ஆடித்தான் பார்க்கோனும் அள்ளு அட்வைஸ் பண்ணி எவனாச்சும் வந்தான்னா தள்ளு'

ஜெமினி

'மோகம் என்று வந்து விட்டால் முகவரியே தேவையில்லை'

தமிழன்

'லைசென்ஸ் இல்லாத யாரைப் பார்த்தாலும்
லவர் இவளென்று தோணுது'

தமிழன்

'மண்ணில் உள்ள பொருள் என்னவென்று
செயற்கைக் கோள்கள் தேடும்
ஒரு பெண்ணில் உள்ள பொருள் என்னவென்று
என் கண்கள் தேடும்'

ஏப்ரல் மாதத்தில்

'பொண்ணுங்க முகங்களை பார்க்கவே மாட்டோம்
ஆனா முகம் தவிர மத்தத பார்ப்போம்'

சமுத்திரம்

'தாராளமா மனசிருந்தா கேரளான்று தெரிஞ்சுக்கோ..

ஜெமினி

'ஏராளமாய் மார்பிருக்கு தாராளமாய் மனசிருக்கு'

சாமி

'கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா.. ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கிலாமா..
தாலியத்தான் கட்டிகிட்டு பெத்துக்கலாமா.. இல்ல புள்ளகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா.'

'கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டு, குமரி ருசியா இருந்தா குமரிய வெட்டு..

'நாயுடுஹாலா மாறிவிட நாங்க ரெடி எங்கள மார்போடு சேர்த்துக் கொள்ள நீங்க ரெடியா'

*****************************

இன்னும் எவ்வளவோ இருக்கின்றன.....

எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் தீராது.....

இவ்வளவு தரம் வாய்ந்த நம் தமிழ் திரைப் பாடல்களூக்கு இன்னமும் ஏன் ஆஸ்கார்அவார்டு கிடைக்கவில்லைஎன்பது எட்டாவது உலக அதிசயமே.......

Thursday, November 05, 2009

JOB OPPORTUNITY


URGENT & IMMEDIATE PLACEMENT


10 YEARS WELL EXPERIENCED STORE KEEPER (CONSTRUCTION INDUSTRY) URGENTLY REQUIRED IN ABU DHABI FOR A WELL REPUTED FIRM. ONLY QUALIFIED & EXPERIENCED CANDIDATES CALL MR. KHALID SABBAH ON 00 971 50 391 0937
Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog