Saturday, August 29, 2009

வரதட்சிணை வாங்காத வாலிபருக்கு வழிமேல் வந்த அதிர்ஷ்டம்......

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

வரதட்சிணை வேண்டாம் என்று சொல்லி திருமணம் செய்த வாலிபருக்கு,

மணமுடித்து வீட்டில் வரும் முன்பே அதிர்ஷ்டம் மூலம் கிடைத்தது நாற்பது

லட்சம் ரூபாயும், கூடவே ஐம்பது பவுன் தங்கமும்.

கேரளாவில், திருச்சூர் நகரில் வசிக்கும் 'சுபீஷ்' என்பவருக்குத்தான் இந்த அதிர்ஷ்ட மழை தேடி வந்து கொட்டியது.

இவரது வீட்டின் அருகாமையில் வசிக்கும் 'சவீதா' என்பவருடன் திருமணம் சென்ற செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருமணத்திற்கு சில நாட்கள் முன் 'துணிமணிகள்' வாங்குவதற்காக கடைக்கு சென்றவர், ஐந்நூறு ரூபாய்க்கு சில்லறை இல்லாத காரணத்தினால், அருகிலிருந்த லாட்டரிக் கடையில் 'கேரள அரசின் 'வின் வின்' சீட்டு ஒன்றை வாங்கினார்.

திருமணம் முடிந்து வீட்டில் வந்த பொது, இவரை எதிர் பார்த்து ஒரு பெருங்கூட்டமே காத்திருந்தது.

இவர் வாங்கியிருந்த
கே. டபிள்யூ.
233008
என்ற எண்ணுக்கு அன்று நடந்த குலுக்கலில் பரிசு விழுந்திருந்தது.

இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை ஏற்கனவே காலமாகி விட்டதால், டிப்பர் வண்டி ஒட்டி குடும்பத்தின் முழுச் சுமையும் தாங்கிய இவருக்கு அதிர்ஷ்டம் துணை புரிந்ததை நினைத்து இவர் மட்டுமின்றி சுற்றுப்புற வாசிகளும் சந்தோசப்படுகின்றனர்.

உண்மையில் என்ன என்று சொல்வது.

வீட்டுக்கு வந்த மகாலட்சுமி.... என்பார்கள் .......அது தானா....

இல்லை....

வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்த இவரது நல்ல மனதிற்கு இறைவன் தந்த அன்பளிப்பா.....

எது வேண்டுமானாலும் இருக்கட்டும்.... நல்லது நடந்தால் எல்லாவருக்கும் மகிழ்ச்சிதானே.....

4 அன்பு உள்ளங்கள்....:

நட்புடன் ஜமால் said...

என்ன சொல்றதுன்னு தெரியலை நண்பரே

லாட்டரி மீது நம்பிக்கையற்றவன் என்பதை விட வெறுப்புடையவன்.

-----------------

வரதட்ச்சனை வாங்கவில்லை என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது.

Jazeela said...

வாழ்க வளமுடன்.

தேவன் மாயம் said...

இப்படி அமைவது அதிர்ஷ்டம்தான்!!

கலையரசன் said...

//நல்லது நடந்தால் எல்லாவருக்கும் மகிழ்ச்சிதானே//

கண்டிப்பாக மகிழ்ச்சிதான் மாதவ்...

Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog