வாழ்வில் எதிர்பாராமல் வந்த புயல் ....கூடவே இடியும் மின்னலும்....
மெகா சீரியல் - எபிசோட் ஒன்று.
கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம்
ஒன் அன்ட் ஒன்லி ராட் மாதவ்
முன்குறிப்பு: வாசித்து விட்டு மனம் உருகி கண் கலங்குபவர்களுக்கு ஒரிஜினல் சங்கு மார்க் கைக்குட்டை (கம்பெனி வகை) இலவசம்.
முன்குறிப்பு: வாசித்து விட்டு மனம் உருகி கண் கலங்குபவர்களுக்கு ஒரிஜினல் சங்கு மார்க் கைக்குட்டை (கம்பெனி வகை) இலவசம்.
*****
நாம என்னதான் எல்லாருக்கும் நல்லது செஞ்சாலும் சில சமயம் நம்ம தப்பு
பண்ணாமலே நம்ம தல மேல இடி மாதிரி ஏதாவது வந்து விழுகும். ****
கேட்டவுன்னே ஷாக் ஆயிருவோம். இறைவா ஏன் இந்த சோதனை....னு.....
அத கேட்டு மனசு தளராம முன்னால போய்கிட்டே இருக்கணும்.****
சில வருடங்களுக்கு முன்பு....
திடீரென காலையில் அப்பா,,,,,
'இந்தா பிளைட் டிக்கட்டு, மாமா வீட்ல போய் ரெண்டு மாசம் என்ஜாய் பண்ணிட்டு வா'. இது கிரெடிட் கார்டு. லிமிட்டா செலவு பண்ணு. அவசியம் வந்தா மட்டும் 'எ டி எம்' பக்கம் போ என்ன....'
'என்னப்பா திடீர்னு'
போடா, இந்த ரெண்டு மாசமாவது துபாய் கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டும்'
கேரளா, கோட்டயம், சங்கனாசேரி, பெருன்ன, என் எஸ் எஸ் கல்லூரிக்கு பின்புறம் மாமாவின் வீடு, சூப்பர் லொக்கேசன்.... அடிக்கடி பெய்யும் மழை வேறு.
மாமா இந்தியன் பாங்கில் பிராஞ்ச் மேனேஜர். அத்தை, ஒரே மகள் சைலா.
வந்தவுடன் மாமா கார் சாவி கொடுத்தார். 'வேண்டாம் மாமா எனக்கு டூ வீலர் போதும்'
தினமும் காலையில் சைலாவை கொண்டு காலேஜில் விடுவேன், மாலையில் பிக் அப். போகும் வழியில்தான் என் எஸ் எஸ் பெண்கள் கல்லூரி.
ஐந்து நிமிடத்தில் மெயின் ரோடு. அங்கிருந்து ரெண்டு கிலோ மீட்டரில் எஸ் பி (ஆண்கள்) கல்லூரி. அடுத்த ஐந்து நிமிடத்தில் சைலா படிக்கும் 'அசம்சன்' பெண்கள் கல்லூரி.
ரோட்டில் செல்லும் போது ஒரு பெண்ணையும் திரும்பி பார்க்க மாட்டேன்.**** சைலாவுக்கு ஆச்சர்யம்.
ஒரே வயது என்பதால் என்னை மரியாதையாக 'வாடா, போடா என்றுதான் கூப்பிடுவாள்.
நானும் மிக மரியாதையாக ' வாடி, போடி என்றுதான் கூப்பிடுவேன்.
ஒரு நாள் கேட்டாள். 'ஏண்டா உனக்கு லேடீஸ் னாலே பிடிக்காதா?
என் பதில் 'ரஜனி' ஸ்டைலில்'
'ஹேய்.... இங்க பாரு.. இங்க... இங்க....சில பேர் புறக்குறப்பவே ஆண்டவன் நெத்தில கோடு போற்றுவான். எனக்கு நான் நல்லவேனு 'நெத்தில, நாலு கோடு போட்டு லேபளும் போட்டு, சீல் பண்ணி, லோகோ வும் போட்டுட்டான்.
பொம்பளைய நாம திரும்பி பாக்கக்கூடாது. நம்மளோட நல்ல குணத்த வச்சு அதுங்க நம்ம பின்னாலே வரணும்.**** அதுதான் நானு. '
'இள ரத்தம், இமயமல முன்னால வந்தா கூட ரெண்டா பொளந்து ரோடு போட்டுக்கிட்டு போய்ட்டே இருப்பேன். '****
ஐஸ், சுஷ், சான்ரா, ஜென்னி, சின்டி, பமீலா, இல்லி, ஹெஇடி, எல்சா, கிளுசியா இந்த பத்து பேரு முன்னால வந்து மண்டி போட்டு ' ஐ லவ் யு' னு சொன்னா,
'சாரிங்க, நீங்க நினைக்குற ஆளு நா இல்ல, எம்மனசுல காதலுக்கு இடம் இல்ல, இருந்தா சொல்லி அனுப்புறே, மன்னிச்சுகோங்க, அக்காமார்களே' அப்படீன்னு சொல்லி திருப்பி அனுப்பிருவே' தெரியுமா......****
சொல்லி விட்டு திரும்பி பார்த்தேன். அவள காணோம்.
ரெண்டு வாரம் போனது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் எல்லாரையும் கையில் எடுத்து விட்டேன். அடிபொலி யா பொழுது போனது.
ஒரு சண்டே மாமா அழைத்தார்.
ஹோட்டல் வாணி லே 'புட் பெஸ்டிவல்' வா போய்ட்டு வரல்லாம்.
'நீங்க கிளம்புங்க மாமா, நான் பின்னாலே வர்றேன்.' கிளம்பினேன். லேசான சாரல் மழை, சிறிது குளிர்.
அது ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டல். பரவாயில்லை. மாமா இன்னம் வரவில்லை.
ரிசப்சனில் அமர்ந்தேன். முன்னால் பார்த்தேன். ஒரு போர்டு ' பார்' .
ஓஹோ இங்கு பார் இருக்குல்ல, மறந்தே போயிட்டேன். மெதுவாக உள்ளே நுழைந்தேன். மெல்லிய வெளிச்சம். கூட்டம் அவ்வளவாக இல்லை, இருட்டில் யாரோ கைகாணிப்பது தெரிந்தது.
'ஒய் மாப்ளே, என்ன இங்கே'
அருகில் போய் பாத்தேன். எனது மாமாவின் தம்பி.
'ஆஹா மாட்னோம்டா ராசா.... எப்படி தப்பிப்பது.
'இல்ல சின்ன மாமா, சும்மா கூல் ட்ரிங்க்ஸ் குடிக்கலாமுன்னு???? அசடு வழிந்தேன்.
'என்ன கூச்சம் மாப்ளே, உக்காரு, என்ன சாப்புடுற?
'சின்ன மாமா, அப்பா, மாமாக்கு லா தெரிஞ்சா நல்லாருக்காது.
'போடா டுபுக்கு... எம்மச்சான் உன்னைய இங்கே அனுப்பி வச்சது எதுக்கு தெரியுமா? சின்னப்புள்ளங்கள போலீஸ் பிடிச்சா 'சீர்திருத்தப்பள்ளிக்கு' அனுப்பி வப்பாங்க. உன்னைய 'இங்க' அனுப்பி வச்சுருக்காரு... அவ்வளவுதான். பேசாம அடி மாப்ளே' என்றார்.
பெருமையா இருந்துச்சு. ஆஹா நம்ம புகழ் துபாய் லருந்து கேரளா வரைக்கும் பரவிருச்சுன்னு நினைச்சப்ப.****
'வெயிட்டர், மாப்ளைக்கு ரெண்டு பெக் 'பீட்டர் ஸ்காட்' கொண்டு வாப்பா என்றார்.
'சின்ன மாமா, எதுக்கு வீண் செலவு,
போ மாப்ளே, உனக்காக ஒரு ஐந்நூறு ரூபா கூட செலவு பண்ண மாட்டேனா?
சரி மாப்ளே, டாய்லெட் போயிட்டு வந்துடறேன்' போனவர் கால் மணி நேரம் கழிச்சு வந்தாரு.
'என்ன மாப்ளே, அடிக்காம அப்படியே வச்சுருக்கே?
பக்கத்தில் நின்ன வெயிட்டர் அமைதியாக' சிவன் சார், இது ஆறாவது ரவுண்டு என்றார்.
முழித்த மாமா சமாளித்தவாறு, 'மாப்ளே சாப்பாடு அடிப்போமா என்றார்.
வெளுத்து வாங்கினேன். பில் வந்தது. திறக்காமல் 'சின்ன மாமா நா கொடுக்குறேன்'
'போ மாப்ளே, சின்ன மாமாவுக்கு இதெல்லாம் தூசு' என்றவர் திறந்தார்.
நாலாயிரத்துக்கு கொஞ்சம் குறைவு. முகத்தில் ஈயாடவில்லை.
'உங்கப்பன் சும்மா இல்ல உன்ன இங்க அனுப்பி வச்சது' முனங்கினார்.
மறுநாள் காலை, எழுந்தபோது மணி ஒன்பது.
'என்ன அத்த, சைலா கிளம்பியாச்சா?
'ஆமா நீதான் குரட்ட விட்டு தூங்குன..... அதான் மாமாகூட கிளம்பிட்டா?
அன்று இரவு மாமா சொன்னார்.
'நாளைல இருந்து 'என் எஸ் எஸ் காலேஜ் வழியா போகாத... மெயின் ரோடு வழியா போனா போதும்'.
ஒன்றும் புரியவில்லை. நமக்கேன் வீண் வம்பு, பெரியவுங்க சொன்ன கேட்டுக்கணும் ****
இரண்டு வாரம் கழிந்தது.
கையில காசு, வாயில தோச......பேசாமல் இங்கேயே செட்டில் ஆகி விடுவோமா என்று தோன்றியது.
வாழ்க்கை வாழ்வதற்கே.... ஜெமினி படத்தின் அர்த்தம் புரிந்தது.
ஒரு சண்டே. மாமா ஹாலில் இருந்து என்னை கூப்பிட்டார்.
'நாளைல இருந்து நீ சைலாவ காலேஜ் கொண்டு விடவேண்டா'
'ஏம்மாமா'
'அதெல்லாம் ஒன்னும் இல்லடா, சொன்னா கேளு',
'இல்ல மாமா, எனக்கு உண்மை தெரிஞ்சாகனும், சொல்லுங்க மாமா'
அத்த உடனே வந்தாங்க.. ' ஏங்க, அவன்தான் கேக்ரான்ல, என்னன்னு சொல்லுங்க'
மாமா கத்த ஆரம்பித்தார், நான் விடவில்லை,
கடைசியில் மாமா சொன்னார்.
'டமார்' 'டமார்' 'டமார்'
நெஞ்சு வெடித்து விட்டதோ என்று தொட்டு பார்த்தேன்.
நல்லவேள. கய்ல இருந்த சில்வர் பாத்திரத்த அத்த கீழ போட்டது.
தளர்ந்த மனதுடன் எழுந்தேன்.
'மாமா' இனிமேலும் என்னால இங்கே இருக்கே முடியாது. குட் பை, கெளம்புறேன்'.
'மாப்ளே, மாப்ளே' மாமாவும் அத்தையும் கூவுவது காதில் கேட்டது.
(இடை வேளை)
சின்ன பசங்க டிவி சானெல் மாத்திக்கலாம்
சின்ன பொண்ணுங்க எஸ் எம் எஸ் அனுப்பலாம்
மீடியம் பய்யங்க தம்மடிக்க போகலாம்
பொண்ணுங்க அடுப்படில காஞ்சு போன தோசைய திருப்பி போடலாம்
கேப்ல ஸ்மால் அடிக்குரவங்க ஒன்னு உள்ள தள்ளிக்கலாம்.

பெருசுங்க பீடி குடிக்கலாம், பாட்டிங்க வெத்தல பாக்கு போட்டுக்கலாம்.
***********
ஆமா சார், இவ்வளவும் சொல்லிட்டு கிளைமாக்ஸ் மட்டும் சொல்ல மாட்றீங்களே ஏன் சார்'
***********
தமிழ் நாடு, கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி
ஒரு ஆம்னி பஸ்... நேரம் ராத்திரி மணி எட்டு.
ஜீன்ஸ் பேன்ட், டி ஷர்ட், கூலிங் கிளாஸ், ஓவர் கோட், ஜெர்கின், தலைல தொப்பி,
ஆட்டோகிராப் ல சேரன் ஸ்டைல் ல நா.
மூணாவது வரிசைல ரெண்டாவது சீட்ல ஜன்னலோரம்.
எம் பக்கத்துல ஒரு பொண்ணு, அது கண்ணு கலங்கிருக்கு.
திடீர்னு எங்கைய புடிச்சது.
'சார் ரியலி யு ஆர் கிரேட், உங்க கதைய கேட்டு எனக்கு மனசே உருகி போச்சு சார்.'

சேரன் ஸ்டைலில் சிரித்தேன். 'ஹ ஆஆ....ஹ..ஹா....'
'என்னத்த சொல்ல'
'அதான் சார் உங்க மாமா அப்படி என்ன சார் சொன்னாரு'.
'பெண்கள்னாலே நான் வந்து தெய்வமா மதிக்கிறவன். ஆனால் அந்த பெண்களே எனக்கு ஆப்பு வச்சா.... நான் யாருகிட்ட பொய் சொல்றது.'
'சார், பிளீஸ், சொல்லுங்க சார்' என் கைய்யை சுரண்ட ஆரம்பித்தாள்.
முதுகை காண்பித்தேன். 'இங்கே கொஞ்சம் சொரியுது சுரண்டி விடும்மா'
பெண்ணின் முகம் மாறியது. 'சார் தயவுசெஞ்சு சொல்லுங்க சார், இல்லேன்னா நான் அழுதுடுவேன்'
துனத்தல் தாங்க முடியாமல் சொல்ல ஆரம்பித்தேன்.
'சொல்லுங்க மேடம், என்ன விஷயம்'
'சார் உங்க பொண்ண கூட்டிகிட்டு, ஒரு பய்யன் போறானே, அவன் யாரு உங்க சொந்தமா?'
ஆமா மேடம், என்னோட மாப்ளேதான். என்னா மேடம், ஏதாவது பிரச்சனையா?
அவன் ஆளு கொஞ்சம் 'கோக்மேக்' பார்ட்டி தான். ஆனா ரொம்ப நல்லவன்.
'அதெல்லாம் இல்ல சார், ஒரு சின்ன ஒப்ளிகசன்.'
'சொல்லுங்க'

**********
'சார் உங்க கிட்ட தனியா கொஞ்சம் பேசணும்'
ஒரு மண்டே, காலை மணி பத்து. என் மாமாவின் அலுவலகம். மாமா மட்டும் தனியாக. ஒரு வயது முதிர்ந்த பெண்மணி உள்ளே நுழைந்தார்.
அவர் என் மாமாவின் வீட்டருகில் உள்ள என் எஸ் எஸ் பெண்கள் கல்லூரியின் முதல்வர்.
'அடடே, வாங்க மேடம், என்ன இந்த பக்கம். வாங்க, வாங்க.....'
அவர் என் மாமாவின் வீட்டருகில் உள்ள என் எஸ் எஸ் பெண்கள் கல்லூரியின் முதல்வர்.
'அடடே, வாங்க மேடம், என்ன இந்த பக்கம். வாங்க, வாங்க.....'
'சொல்லுங்க மேடம், என்ன விஷயம்'
'சார் உங்க பொண்ண கூட்டிகிட்டு, ஒரு பய்யன் போறானே, அவன் யாரு உங்க சொந்தமா?'
ஆமா மேடம், என்னோட மாப்ளேதான். என்னா மேடம், ஏதாவது பிரச்சனையா?
அவன் ஆளு கொஞ்சம் 'கோக்மேக்' பார்ட்டி தான். ஆனா ரொம்ப நல்லவன்.
'அதெல்லாம் இல்ல சார், ஒரு சின்ன ஒப்ளிகசன்.'
'இனிமே அந்த பய்யன எங்க காலேஜ் பக்கம் வர விடாம பாத்துக்கோங்க சார்'
'தெளிவா சொல்லுங்க மேடம்' எனக்கு ஒன்னும் புரியல'.
சுற்று முற்றும் பார்த்த முதல்வர் மெதுவாக கிசுகிசுத்தார்.
'சார், எங்க காலேஜ்ல மொத்தம் ரெண்டாயிரம் பொண்ணுங்க படிக்குதுங்க.
நாப்பது பேரு வேற என்னையும் சேத்து. உங்க பய்யன் தினம் ஒரு ஒரு கெட்
அப்ல வர்றான். சரியா காலேஜ்ல கிளாஸ் துடங்குற சமயத்துல அவன்
வர்றதுனால, எல்ல பொண்ணுங்களும் அவன பாக்குறதுக்காக ஜன்னல்
ஓரம்மா தவம் கிடக்குறாங்க. அதே மாதிரிதான் சாயந்தரமும். எல்லாரும்
மூணு முப்பத்தஞ்சுக்கே கிளாஸ்ஸ விட்டு கிளம்பிர்றாங்க. அவன் மூணு
நாப்பத்தஞ்சுக்கு வர்றான். எங்களால ஸ்டூடன்ச கண்ட்ரோல் பண்ண முடில.
சோ பிளீஸ் என்னைய உங்க சொந்தம் சகோதரி மாதிரி நினச்சு கெல்ப்
பண்ணுங்க சார்,
இல்லேன்னா என்னோட வேலையும் போயிரும், கூடவே காலேஜ் பேரும்.
************
ஆம்னி பஸ், நான், பெண்........
'ச்சே என்ன சார் இது பெருமைப்பட வேண்டிய விஷயம். நீங்க வேற. சரி இது போகட்டும். அப்புறம்தான் ரூட்ட மாத்திட்டீங்கள்ள.... நீங்க நல்லவர்னு ஊரே சொல்லுதே சார், அப்புறம் எதுக்கு உங்க மாமா உங்க அத்த பொண்ண கொண்டு காலேஜ் ல விடாதீனு சொன்னாரு.

கண்களை துடைத்து கொண்டேன்.
நா தளுதளுத்தது, இதயம் கனத்தது,
வார்த்தைகள் வரவில்லை.
உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு 'சிவாஜி' ஸ்டைல் ல சொன்னே.
நா தளுதளுத்தது, இதயம் கனத்தது,
வார்த்தைகள் வரவில்லை.
உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு 'சிவாஜி' ஸ்டைல் ல சொன்னே.
'அந்த காலேஜ் பிரின்ஸ்பாலும் அதையே தாம்மா சொன்னாரு.
**********
சிறு வால்:
**** = ராடின் பொன்மொழிகள்
அடக்க முடியாத தமிழ் பற்று, பாசம், நேசம், நட்பு, காரணமாக எனது வலைப்பதிவை 'பின் பற்ற' நினைப்பவர்களுக்கு/துடிப்பவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
மாத சந்தாவாக யு எஸ் டாலர் இரண்டாயிரத்துக்கான காசோலையோ, டி டி யோ, எடுத்து எனக்கு தெரிவிக்கவும். வருட சந்தா யு எஸ் டாலர் ஐநூறு, ஐந்து வருட சந்தா இருநூறு, ஆயுள் சந்தா நூறு.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
**** = ராடின் பொன்மொழிகள்
*****
ஒரு முக்கிய அறிவிப்பு: தற்போது தவிர்க்க முடியாத தொழில் நுட்ப கோளாறு காரணமாக 'பின்பற்றுவர்கள்' வசதி இயங்கவில்லை.
அடக்க முடியாத தமிழ் பற்று, பாசம், நேசம், நட்பு, காரணமாக எனது வலைப்பதிவை 'பின் பற்ற' நினைப்பவர்களுக்கு/துடிப்பவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு.
மாத சந்தாவாக யு எஸ் டாலர் இரண்டாயிரத்துக்கான காசோலையோ, டி டி யோ, எடுத்து எனக்கு தெரிவிக்கவும். வருட சந்தா யு எஸ் டாலர் ஐநூறு, ஐந்து வருட சந்தா இருநூறு, ஆயுள் சந்தா நூறு.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
simpleblabla@yahoo.com or simpleblabla@gmail.com