Wednesday, September 30, 2009

பதிவராக மாறிய மனிதனின் பரிதாப நிலை.

ஒழுங்காக செவனே என்று வேலை பார்த்துக் கொண்டு.....
உருப்படியாய் வாழ்க்கை வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவன்....

என்று வலைப் பதிவைத் துவங்கினேனோ... அன்று முதல் வந்து விட்டது.....வாழ்வில் சில மாற்றங்கள்...

கூகிளாண்டவர் இலவசமாக அருளிய பிளாக்கர் என்னும் முகமூடியை என்று அணிந்தேனோ..... அன்று முதல், மனம் தடம் மாறி தண்ட வாளத்தை விட்டு தறி கெட்டு ஓட ஆரம்பித்து விட்டது....
நானும் ஒரு பதிவர்தான்....

இதோ என் பருவ மாற்றங்கள் ...


வலை ஆரம்பித்த புதிதில் 'கடன்' கேட்டாவது யாராவது டீ வாங்க மாட்டானா, என்று கல்லாவைத் திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கும் 'டீக்கடைக்காரர்' போல 'கம்மண்ட்சுக்கு காத்திருப்பேன்.

கால் வலிக்க ஓடி ஓடி உருப்படாத பதிவுகளை எல்லாம் சூப்பர் சூப்பர் என்று பின்னூட்டம் இடுவேன்.

பெண்கள் பெயரில் யாராவது ஆண்கள் வலை வைத்திருந்தாலும், பின்னாலேயே ஓடி பாலோவ் பண்ணி ஆஹா, ஓகோ...சூப்பர்... அருமை என்று பின்னூட்டம் போடுவேன்.
ஆனால் அற்பனுக்கு வாழ்வு வந்தது போல் என்னையும் ஒரு ஆளாக மதித்து பத்து நூறு பேர் பாலொவ் பண்ண ஆரம்பித்து விட்டால், பின்னர் நினைப்பு எல்லாம் 'சரவண பவன்' முதலாளி மாதிரி ஆகி விடும்.
அதன் பிறகு கல்லாவை விட்டு நகர மாட்டேன்....
பின்னோட்டம் என்பது ஒன் வே ஆகி விடும்... ...
பின்பு, நான் வைத்ததுதான் விலை, நான் செய்வது தான் சமையல்.... படித்து அனுபவிக்க வேண்டியது பாலோயர்சின் தலை விதி.


வில்லங்கமாக ஒரு பதிவைப் போட்டு விட்டு, விவரமான ஆள் என்பதால் 'கம்மன்ட் மாடேரசனை' அமுல் படுத்தி, 'உசுப்பி உசுப்பியே ஏத்தி விடும் 'புண்ணியவான்களின்' கம்மண்ட்சை மட்டும் வெளியிடுவேன்... பிடிக்காத பின்னூட்டங்களை பிளாக் செய்து விடுவேன்.

பிடிக்காத ஒருவன் பிரபலமான ஒரு பதிவைப் போட்டார் என்றால் 'அனானி' பெயரில் கம்மென்ட் பாக்சை அலங்கோலப்படுத்தி விடுவேன்.

பதிவர் சந்திப்பு நடக்கும்போதெல்லாம், பவ்யமாக ஒரு சைடு ஒதுங்கி நின்று, நோட்டம் விடுவேன்.

யாராவது 'புன்னகை மன்னன்' மாட்டினால், நைசாகப் பேசி சைசாக ஏதாவது பர்சனல் சரக்கு கிடைக்குமா என்று தூண்டில் போடுவேன்.
சாட்டிங்கில் பேசுவதை காபி பேஸ்ட் செய்யவும், மீடிங்கில் பேசுவதை மொபைலில் பதியவும் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

ஏனெனில் 'தற்காப்பு ஆயுதம் போல் தவறாமல் சில எதிர் சந்தர்ப்பங்களில் பயன்படுமே....

இரண்டு பதிவர்கள் சேர்ந்து கொண்டு... 'நான் அடிப்பது போல் அடிப்பேன்.. நீ அழுவது போல் நடி' என்று சொல்லி வைத்துக் கொண்டு..... அடிப்பது போல் அடித்துக் கொண்டு அழுவது போல் அழுவார்கள்...
விவரம் தெரியாமல்... நான் யாருக்காவது... ஆதரவாய்....அல்லக்கை போல் பின்னூட்டம் இட்டு கலக்குவேன்.... (வேலை மெனக்கெட்டு....)

இறுதியில் இரண்டு பேரும்... 'கிழிந்த காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு ' மாப்ளே... வலைல இதெல்லாம் சகஜமப்பா'
என்று... கட்டிப் பிடித்து ....அரபி ஸ்டைலில் 'முத்தம் கொடுத்து... ஒன்றாய் உட்கார்ந்து... குவாட்டரும் கோழி பிரியாணியும் சாப்பிடுவதைப் பார்க்கும்போது 'ஙே' என்று முழிப்பேன்....

சமயலறையில் ஸ்டவ் எரியவில்லை என்றால்... உடனே...
ஸ்குரு டிரைவரை எடுத்து... பார்ட்.. பார்ட்... ஆகக் கழட்டி... அக்கு வேறு ஆணி வேராகப் பிரித்துப் பொட்டு மண்டை காய்வேன்...
கியாஸ் சிலிண்டரில்... கியாஸ்.. தீர்ந்து போனதால்தான்... எரியவில்லை என்பது என் மர மண்டைக்கு தெரியாது...
ஏனெனில் நான் ஒரு பிரபலப் பதிவர்..

எப்போதுமே... தும்பை விட்டு வாலைப் பிடிப்பதுதான் என் வழக்கம்....

சவுண்ட் செல் பாதர்,
தூய தமிழ் சூரியன்,
அதிர்ஷ்டப் பார்வை,
ஒரிஜினல் நண்டு,
போலி வண்டு,
நீள் பதிவு வீரர்......

இப்படி கூட்டம் கூட்டமாக எல்லாரும் ரத்தம் வருமளவுக்கு வலை ரோட்டில் அடித்து உருண்டு புரண்டு போலீஸ் ஸ்டேஷன் வரை ஓடினாலும்......

எனக்கு


யார்
மீதும் கோபமோ.. பாசமோ... நேசமோ... ஒன்றும் வராது...... மாறாக.....

இவர்களது பதிவுகளை.... ஒவ்வொரு லின்க்கையும் திறந்து திறந்து....

(ஒரே நேரத்தில் நெருப்பு நரியின் இருபது ஜன்னல்களை திறந்து வைத்துக் கொண்டு)

ராணி முத்துவில் வரும் ராஜேஷ் குமார், பி. டி. சாமி திகில் கதைகளை போல் படித்துக் கொண்டிருப்பேன்.
அப்துல் கலாமும், மாதவன் நாயரும், கவுண்டவுன் முடிந்து விண்ணில் சீறிப் பாயும், செயற்கைகோளை, இமை கொட்டாமல் பார்ப்பது போல மானிட்டரைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.

இன்னும் நிறைய இருக்கின்றது.....

எழுதிக்கொண்டே... இருக்கலாம்...

எல்லாவற்றிற்கும் காரணம்...

நான் ஒரு பதிவர்.... பிளாக்கர்... பிரபலப் பதிவர்.... பிரபலப் பிளாக்கர்...

Monday, September 28, 2009

தென் இந்திய மசாலாப் படங்கள்.

தென் இந்திய மசாலாப் படங்கள்.

அவசரமான ஒரு பணியில் இருந்தபொழுது.... நண்பர் ஒருவரின் 'கொசுக்கடி தாங்க முடியவில்லை....

'இன்டெர்நெட்டில் 'மசாலாப் படங்கள் நிறைய கிடைக்குமே... காட்டு... காட்டு என்று.... சொரிந்து கொண்டெ இருந்தார்....

'பொறுமை இழந்து.... 'ஐந்து நிமிடத்தில் 'காண்பித்துத் தருகின்றேன்... என்று கூறி ...... காண்பித்தவன்,,,, திரும்பிப் பார்த்தேன்..

ஆளைக் காணவில்லை.... ஜுட்... ஆகி விட்டார்.....

நீ்ங்களும், பார்த்து ரசிங்களேன்.....





Life is not Waiting for SomeOne
who made for YOU...
But life is living for SomeOne who lives Because of YOU....!!!
Realize you can't change the past,
but you can start a new tomorrow.
Don't try to do everything at once;
take one step at a time.!!!!!!!

'The biggest guru-mantra is:
Never share your secrets with anybody. !
It will destroy you.'
(Chanakya quotes)



மனமே........
கனவை கலைய விடாதே!!
நினைவை தொலைய விடாதே!!
துணிவை பணிய விடாதே!!!
நிமிர்ந்து நில் ....உலகம் உன் பின்னால்....
Blog Widget by LinkWithin

Search This Blog